பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 299

“எஸ்டேட் தொழிலாளர் யூனியன் தேர்தலிலே மல்லை இராவணசாமியின் கட்சிக்கு எதிராக வேலை செய்த ஆட்கள் எல்லாம் சைக்கிள் செயினால் மூக்கு முகரை தெரியாமல் அடிக்கப்பட்டு ஆபத்திரியிலே கிடக் கிறாங்க. தொழிலாளர் குடியிருப்புக்களிலே ஆம்பிளை ஆளுங்க வெளியிலே போயிருக்கிற நேரத்திலே புகுந்து பொம்பிளைகளை மிரட்டறாங்க. கன்னாபின்னான்னு பேசறாங்க கீழ் மட்டத்திலே தங்கள் கட்சி ரெளடிகளைத் துாண்டிவிட்டு இவ்வளவு காலித்தனங்களுக்கும் ஏற்பாடு செய்துவிட்டு மேல் மட்டத்திலே இருக்கிற அமைச்சருங்க, ‘அமைதி பேணுவீர், தமிழ்ப் பண்பாடு காப்பீர் அப்பிடின்னு அடிக்கொரு தரம் அறிக்கை வேற விட்டுக் கிட்டிருக்காங்க. கையைப் பிடிச்சு இழுக்க வந்தவங்களோட சண்டை போட்ட பொண்ணுமேலே விபசார வழக்குப் போடுறதும், நியாயம் கேட்கப் போனா புரொபஸ்ரைப் போலீஸ்காரர் அடிக்கிறதும் நடக்கிற ஊர்லே இனிமே எந்த அக்கிரமமும் நடக்கமுடியும் தம்பீ!”

“கொஞ்ச நாளைக்கு முன்னே திடீர் திடீர்னு ஸ்லம் ஏரியாவிலே நூறு குடிசை, இருநூறு குடிசைன்னு தீப்பிடிச்சதாகவும், அப்படித் தீப் பிடிச்ச குடிசைகளுக்குத் தீவச்சவங்க தேர்தலிலே தோற்றுப்போன கட்சியைச் சேர்ந்தவங்கதான்னும் சொன்னாங்க பாருங்க. அதனோட இரகசியத்தை இப்பத்தான் மணவாளன் சொல்லித் தெரிஞ்சிக்கிட்டேன். குடிசைவாசிகளுக்குத் தேர்தலில் தோற்றுப்போன கட்சிகள் மீது வெறுப்பு உண்டாக்கவும், தங்கள் மேல் விருப்பு உண்டாக்கவும் என்று சிலர் திட்ட மிட்டுச் செய்த அரசியல் சதி அது. அவர்கள் உங்கள் குடிசைகளை எரித்தார்கள். நாங்கள் கட்டித் தருகிறோம். பாருங்கள்’ - என்பதுபோல் பிரசாரம் செய்ய வசதி பண்ணிக் கொண்டே இவை அனைத்தும் செய்யப்பட்ட தாக மணவாளன் சொல்றாரு முதல் தரமான மனிதர்கள் தங்கள் புகழைக் கூட விரும்புவதில்லை. இரண்டாம் தரமான மனிதர்கள் தங்கள் புகழை மட்டுமே விரும்பு