பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 சத்திய வெள்ளம்

கிறார்கள். மூன்றாம் தரமான மனிதர்கள் தங்கள் புகழ் என்பது அடுத்தவர்களை அவமானப்படுத்துவதன் மூல மாகவே வரவேண்டும் என்று கருதுகிறார்கள். குடிசை களுக்கு நெருப்பு வைத்தவர்கள் இந்த மூன்றாவது வகைப் புகழை விரும்பியிருக்கிறார்கள் போலிருக்கிறது. இட்லர் தோற்றுப் போகணும் இவங்ககிட்டே.”

“அது மட்டுமில்லே தம்பீ? தொழிலாளிங்க போராடினா உடனே ஐயோ! இது. தொழிலாளிகளின் அரசு. இதை எதிர்த்தா போர்க்கொடி பிடிக்கிறீங்கள்’னு கேட்பாங்க. மாணவர்கள் போராடினா, அந்தகோ ! இது மாணவர் களின் அரசு. இதை எதிர்த்தா போர்?ன்னு கேட்பாங்க. விவசாயிங்க போராடினா, இது விவசாயிகளோட சொந்த அரசு. இதை எதிர்த்தா போராடlங்கன்னு நீலிக்கண்ணிர் வடிப்பாங்க. நரிக்குறவர்கள் போராடினாலும், அந்தகோ! இது நகரிக்குறவர்களின் சொந்த அரசு. இதை எதிர்த்து நீங்களே போரிடலாமா? என்று தயாராக ரெடிமேட் ஒப்பாரி வைப்பாங்க இட்லர் இத்தினி கெட்டிக்காரனா இருந்திருப்பானான்னு எனக்குச் சந்தேகம்தான் பாண்டியன்!”

“நாளைக்குக் காலையில் யூனிவர்ஸிடி திறந்ததும் நாங் கள் வகுப்புக்களுக்குச் செல்லப்போவதில்லை. பாலேஸ் வரிக்கும் இரசாயனப் பேராசிரியர் பூரீராமனுக்கும் போலீஸ் இழைத்த அநீதியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறோம். மல்லிகைப் பந்தல் சரித்திரத் திலேயே முதல் முறையாகத் துணைவேந்தரைத் தவிர மற்றெல்லா ஆசிரியர்களும் எங்களுடைய ஆர்ப்பாட்டத் தில் கலந்து கொள்ளப் போகிறார்கள். துணைவேந்தரும், டாக்டர் பொழில் வளவனாரும், பண்புச் செழியனும், வேறு சிலரும் மாணவர்களின் ஊர்வலத்திலோ ஆர்ப்பாட் டங்களிலோ கலந்து கொள்ளக் கூடாது என்று நினைக் கிறார்களாம். மற்ற எல்லா ஆசிரியர்களும் பேராசிரியர் பூரீராமன் போலீஸ் இன்ஸ்பெக்டரால் தாக்கப்பட்டது பற்றி ரொம்பவும் ஆத்திரமாக இருக்கிறார்கள், அண்ணாச்சி!"