பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 301

“பொழில் வளவனாருக்கு எப்பிடித் தம்பி ஆத்திரம் வரும்? அவருதான் அமைச்சர் கரியமாணிக்கம் பிள்ளைத் தமிழ்’னு அமைச்சர் மேலே பிள்ளைத் தமிழே பாடியி ருக்காரே? அது போகுது. உனக்கு எந்த அளவு இங்கே நடந்ததை அப்படியே சொன்னாங்களோ சொல்லலியோ, எனக்குத் தெரியாது. கதிரேசனோ புரொபஸ்ரோ, உங்க கிட்ட நடந்ததையெல்லாம் சொல்லியிருக்க மாட்டாங்க. வெளியிலே நாம் கேள்விப் படறதைவிட அதிகக் கொடுமைகள் போலீஸ் ஸ்டேஷனில் நடந்திருக்குது.

“ யாரிட்டயும் சொல்லிடாதீங்க அண்ணாச்சி! உங்க மனசோட இருக்கட்டும்னு ஸ்டேஷன் ரைட்டரே எங்கிட்டச் சொன்னான். இராவணசாமியோட தூண்டுதலாலேதான் இன்ஸ்பெக்டரு பொய்யா அந்தப் பொண்ணுமேலே ‘விபச்சாரத்துக்கு அழைத்ததாகக் குற்றம் சாட்டி எஃப்.ஐ.ஆர். எழுதச் சொன்னாராம். வாத்தியாரு பூரீராமன் இதைப் பற்றி விசாரிக்கப் போனபோது இன்ஸ்பெக்டரு அவரைக் கழுத்தைப் பிடிச்சு வெளியிலே தள்ளினதாக மட்டும்தான் நீ கேள்விப்பட்டிருப்பே. ஆனால் அதை விட மோசமானதெல்லாம் நடந்திருக்கு. சாதிப் பேரைச் சொல்லித் திட்டிக்கிட்டே பெல்டைக் கழட்டி வாத்தி யாரை அடிச்சிருக்காங்க. அவரை ரொம்ப அவமானப் படுத்தியிருக்காங்க.”

“இனிமே இன்னின்ன சாதிக்காரங்க நியாய அநியா யங்களைப் பற்றிப் பேசக்கூடாதுன்னு நம்ம அரசியல் சட்டத்தையே மாத்திக்க வேண்டியதுதான் போலிருக்கு.” “அப்படியில்லே தம்பி! இன்னிக்கு நாட்டிலே இருக் கிறதே ரெண்டு சாதிதான். கொடுமைப்படுத்தறவங்க, கொடுமைப்படறவங்கன்னு ரெண்டே ரெண்டு சாதிதான், கண்ணுக்குத் தெரியுது. வேறு சாதிகள் எதுவுமே இருக் கிறதாத் தெரியிலே.”

இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் அண்ணாச்சியும் கதிரேசனும் போய் ஏரிக்கரைச் சாலையிலிருந்த அச்சகம்