பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 303

கூடினார்கள் மாணவர்கள். பத்தேகால் மணிக்குக் கண்ணுக்கினியாள் மதுரையிலிருந்து வந்து மல்லிகைப் பந்தல் பஸ் நிலையத்தில் இறங்கியபோது அங்கே நின்று துண்டுப் பிரசுரம் வழங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் அவளை உடனே ஊர்வலத்துக்குப் போய் மாணவிகள்

பிரிவுக்குத் தலைமை ஏற்கும்படி தெரிவித்தார்கள்.

அவள் அவசர அவசரமாக அண்ணாச்சி கடையில் கொண்டு போய்ப் பெட்டியை வைத்துவிட்டுப் பல்கலைக் கழக வாயிலுக்கு விரைந்தாள். காலை எட்டரை மணிக்கே துணைவேந்தர் தாயுமானவனார் பொருளாதாரப் பேராசிரியரையும் வேறு சில ஆசிரியர்களையும் கூப்பிட்டு, ‘மாணவர்கள் நடத்தும் கண்டன ஊர்வலத்தில் ஆசிரியர்கள் யாரும் கலந்து கொள்ளக்கூடாது’ என்று கல்வி மந்திரி விரும்புவதாகத் தெரிவித்தார்.

“போலீஸார் ஒர் ஆசிரியரிடம் காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொண்டிருப்பதால் அதைக் கண்டித்துத் தாங்களும் கண்டன ஊர்வலத்தில் கலந்து கொள்ளப் போவது உறுதி” என்று ஆசிரியர்கள் சார்பில் துணை வேந்தரிடம் தெரிவிக்கப்பட்டது. துணைவேந்தர் தாம் முதலில் கூறியதையே மீண்டும் வற்புறுத்திக் கூறினார். - ‘துணைவேந்தர் அரசாங்கத்திற்கும், ஆளும் கட்சிக் கும் ஏஜெண்டுபோல் செயல்படுவதைத் தாங்கள் வெறுப்பதா கவும், ஒர் ஆசிரியர் தாக்கப்பட்டதைப் பற்றி அவர் வருத் தம் தெரிவிக்காமல் இருப்பதைக் கண்டிப்பதாகவும்” - அவர் கள் பதில் கூறினார்கள். பத்தரை மணிக்கு ஆசிரியர்களும் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பல ஊழியர்களும் ஊர்வல மாகப் புறப்பட்டு வந்து மாணவர்களோடு சேர்ந்து கொண் டபோது பேராசிரியர் பூதலிங்கம் இதைப் பாண்டியனிடம் தெரிவித்திருந்தார். மாணவர்களையும், ஆசிரியர்களையும் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்களையும் தவிர நகரின் பொதுமக்களும், தொழிலாளிகளும், மல்லை இராவண சாமியின் கட்சி தவிர ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர் களும், ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காகப் பெருந்தி