பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 305

கூட்டத்தைப் பார்த்து இராவணசாமியும் குருசாமியும் மிரண்டனர். தோளில் ஆறு கெஜம் புடைவைபோல் புரண்டு கொண்டிருந்த இரட்டைக் கரைத் துண்டுகளை மெல்லக் கீழே நழுவவிட்டு மறைத்துக்கொள்ள முயன்றார்கள். மாணவர்களோ அவர்கள் காது கேட்கும்படியே அவர்களை ஏளனம் செய்து பேசத் தொடங்கினர்.

‘விலைவாசி நிலவரம்-இந்த ஆட்சியில் கீழ்க்கண்ட வற்றின் விலைகள் ஏறியுள்ளன - என்று எழுதிய ஒர் அட்டையில்:

1. மெடிகல் காலேஜ் nட்-ரூபாய் பதினையாயிரம்.

2. குமாஸ்தா வேலை-ரூபாய் மூவாயிரம்+சிபாரிசு.

3. ஆசிரியர் வேலை-ரூபாய் இரண்டாயிரம்.

4. துணைவேந்தர் பதவி நீடிப்புக்கு-மந்திரிக்கு

L.fT&5í.JT l. 4L.-l.— LD.

என்று வரிசையாக எழுதப்பட்டிருந்தது. அந்த அட் டையை ஜீப்பின் அருகே கொண்டு வந்து, உங்களால் ஏறி யிருக்கும் விலைவாசி உயர்வைப் பாருங்கள் என்று சொல் லிக் கொண்டே இராவணசாமிக்கும், குருசாமிக்கும் காட்டி னான் ஒரு மாணவன். விலைவாசிகள் இறக்கம் - இந்த ஆட்சியில் கீழ்க்கண்டவற்றின் விலைகள் படு மலிவாகி யுள்ளன.

1. நீதி

2. நேர்மை

3. பெண்களின் கற்பு

4. மக்களின் உரிமைகள் என்று வரிசையாக எழுதப்பட்டிருந்தது. இந்த வாசக அட்டைகளைப் போலீஸ் ஜீப் அருகே மாற்றி மாற்றிக் காட்டி விசிலடித்துக் கேலி செய்து இராவணசாமியையும் கோட்டம் குருசாமியையும் மடக்கி வளைத்துக் கொண்டார்கள் மாணவர்கள்.

ச.வெ-20