பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 307

அவமானப்படுத்திய போலீஸ் ஒழிக’ என்றெல்லாம் வாசகங்கள் எழுதிய அட்டைகள், பானர்கள், மாணவி களிடம் இருந்தன. மாணவிகளை அடுத்து மாணவர்கள் அணி வகுத்து நின்றனர். மாணவர்களைத் தொடர்ந்து பல்கலைக் கழக ஆசிரியர்களில் பெரும்பாலானவர்களும், ஊழியர்களும் நின்றனர். பொதுமக்களும் தோட்டத் தொழிலாளர்களும் பின்வரிசையில் நின்றனர். பல்கலைக் கழகம் திறக்கின்ற தினத்தன்று மல்லிகைப் பந்தலுக்கு வந்து இறங்கியதும் இறங்காததுமாக ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்திருந்த மாணவிகளுக்குக்கூட அவர்களிடம் அளிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தின் மூலம் எல்லா விவரங் களும் தெரிவிக்கப்பட்டிருந்ததன் காரணமாக உணர்ச்சிக் குமுறல் அதிகமாக இருந்தது. துணைவேந்தர் பல்கலைக் கழகத்தை திடீரென்று மூடி விடுதிகளைக் காலி செய்ய உத்தரவிட்டபோது மேரிதங்கத்தின் தற்கொலை நிகழ்ச்சி யால் மாணவர்களிடையே எவ்வளவு உணர்ச்சிக் குமுறல் இருந்ததோ அதே உணர்ச்சிக் குமுறல் மாணவி பாலேஸ்வரி மீது பொய் வழக்குப் போட முயன்ற போலீஸாரின் கொடுமையாலும் பேராசிரியர் பூரீராமன் தாக்கப்பட்ட அக்கிரமத்தாலும் பல்கலைக் கழகம் திறக்கிற தினமாகிய அன்றைக்கும் ஏற்பட்டிருந்தது. இருபக்கங்களிலும் ஊர்வலத்தின் முன்னும் பின்னும் போலீஸ் வந்து கொண்டிருந்தது. கடைவீதிகளில் எல்லாக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பாதை ஒரங்களில் தென்படும் பூக்கடை, பழம், காய்கறி விற்கும் தள்ளுவண்டிகள்கூடக் காணப்படவில்லை. விண்ணதிர முழங்கும் கோஷங் களுடன் அந்த மிகப்பெரிய ஐந்தாறு மைல் நீள ஊர்வலம் போய்க் கொண்டிருந்தது. ஊர்வலத்தின் முடிவில் பாலேஸ்வரியிடமும், பேராசிரியரிடமும் காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொண்ட இன்ஸ்பெக்டரை உடனே நீக்குமாறு கோரி ஆர்.டி.ஓ.விடம் ஒரு மனுவைக் கொடுப்பதாக இருந்தார்கள் அவர்கள். ஆர்.டி.ஓ. அலுவல கத்திற்கு முன்பாகவே நூறு கெஜம் இப்பால் தலைமைப்