பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 29

புதிய காலத்தில் மொழியின் மேல் இருந்த காமம் தணிந்து, அவர்கள் மொழியைக் காரண காரியங்களோடு நேசிக்கப் பழகிவிட்டார்கள். சிலர் மட்டும் அன்று கண்ட மேனிக்கு மாறாமலே இன்னும் இருந்தார்கள். சி. அன்பர சனைப்போல எம்.ஏ. வகுப்புக்குப் போன பின்பும் அந்த எதுகை மோனைப் பேச்சு யுகத்திலேயே இன்னும் இருந்த சிலரையும் பாண்டியன் அங்கே கண்டான், விஞ்ஞானப் பொருளாதார வளர்ச்சியோடு மொழி வளர்ச்சியையும் சேர்த்து நினைத்த பலருக்கும், மொழிக்குத் தாலாட்டுப் பாடி, அதைத் துரங்கச் செய்வதே மொழி வளர்ச்சி என்று எண்ணும் சிலருக்கும் நடுவே ஒர் அமைதியான - சில சமயங்களில் ஆர்ப்பாட்டமான சிந்தனைப்போர் இருந்து வந்தது. பல்கலைக் கழக மாணவர்கள் பேரவைத் தேர் தலுக்கான துண்டுப் பிரசுரங்களிலும், சுவரொட்டிகளிலும் கூட இந்த இருவிதமான சிந்தனைப் போக்குகளைப் பிரதிபலிக்கும் வாசகங்கள் தென்பட்டன.

அவன் படுக்கையிலிருந்து எழுந்து முகம் கழுவிக் கொண்டுவரக் குளியலறைக்குச் சென்றான். விடுதியின் கோடியிலிருந்த குளியலறைக்குச் சென்றுவிட்டு மீண்டும் அறைக்குத் திரும்பியபோது அங்கே சில மாணவ நண்பர்கள் அவனுக்காகக் காத்திருந்தனர். எல்லோருமாக மெஸ்ஸாக்குச் சென்று காபி குடித்துவிட்டு மீண்டும் அறைக்கே திரும்பி வந்தார்கள்.

“பேரவைச் செயலாளர் பதவிக்கு உன்னை எதிர்த்து யார் யார் போட்டியிடுகிறார்கள் என்று தெரியுமா பாண்டியன் ?”

“நான் இன்னும் விசாரிக்கவில்லை. நான் போட்டி யிடுவதே இன்று காலையில்தானே உறுதியாயிற்று?”

“உன்னை எதிர்த்து ஒரியண்ட்ஸ் ஸ்டடீஸ் பிரிவில் முதுநிலை முதலாண்டு மாணவன் வெற்றிச் செல்வன் போட்டியிடுகிறான். பேரவைத் தலைவர் பதவிக்கு நம் ஆளாக மோகன்தாசும், அவர்கள் ஆளாக சி. அன்பர சனும் போட்டியிடுகிறார்கள். செயலாளர், கூட்டுச் செய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/31&oldid=609519" இலிருந்து மீள்விக்கப்பட்டது