பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 309

கலைஞர் சுவை நீர் அங்காடி (டி ஸ்டால்) என்ற ஹோட்டல் திறந்து வைக்கப்பட்டு நடந்து கொண்டிருந்தது. மாணவிகள் அந்தக் கடை வாயிலைக் கடந்த போது கண்ணுக்கினியாள் ஒரு துண்டுப் பிரசுரத்தை எடுத்து நீட்டி, “தயவு செய்து கடையை மூடிவிடுங்கள். எங்களுக்காகச் செய்யாவிட்டாலும் எங்களுடைய கோரிக்கையில் உள்ள நியாயங்களை மதித்து மற்றெல்லாக் கடைக்காரர்களும் மூடியிருக்கும்போது நீங்கள் மட்டும் திறந்திருப்பது சரியில்லை” என்று அமைதி யாகவே கோரினாள். கடையிலிருந்த ஆட்கள் அதைப் பொருட்படுத்திக் கேட்கவில்லை.

“அந்தப் பருப்பெல்லாம் இங்கே வேகாதும்மா! இது யார் கடை தெரியுமில்லே...? கொள்கைக்காகவாவது வியாபாரமே இல்லாவிட்டாலும் நாங்கள் திறந்து வைத் திருப்போம்” என்று பிடிவாதமாக மறுத்து விட்டார்கள் அவர்கள். அதைக் கேட்டு மாணவிகள் அந்த முரடர் களோடு வம்பு வேண்டாம் என்று அமைதியாகத் தலைமைப் போலீஸ் அலுவலகத்தை நோக்கி முன்னேறினர்.

இருபத்து ஐந்தாவது அத்தியாயம்

பின்னால் தங்களை அடுத்து வருகிற மாணவர்கள் அந்தக் கடை திறந்திருப்பதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று புரிந்துகொண்டு அதை அடைக்கச் செய்யும் பணியை மாணவிகள் தாங்களே செய்யாமல் மாணவர்களுக்கு மீதம் விட்டுச் சென்றனர். அவ்வளவு பெரிய கடைவீதியில் அந்த அறிஞர் கலைஞர் சுவை நீர் அங்காடி'க்காரர் மட்டும் திமிராகவும் அலட்சியமாகவும் கடையைத் திறந்து வைத்து நடத்திக் கொண்டிருந்தது உள்ளம் குமுறச் செய்வதாக இருந்தது. முதலில் அணி வகுத்து வந்த மாணவிகளை அடுத்த மாணவர்கள் அந்த இடத்துக்கு வந்தபோது கதிரேசனும் நாலைந்து நண்பர் களும் போய்க் கடையை அடைக்கும்படி மிகவும் மரியாதையான வார்த்தைகளாலேயே வேண்டினார்கள்.