பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 சத்திய வெள்ளம்

கதிரேசனுடைய வேண்டுகோளுக்கு நேரடியாக மறுமொழி சொல்லாமல், “டேய் ! டோப்பாத் தலையா! இந்தத் தலை மயிரையும் கிருதாவையும் காமிச்சு எங்களை மிரட்ட லாம்னா பார்க்கிறே? மரியாதையா வெளியே போறியா, இல்லே. வாலை ஒட்ட நறுக்கி அனுப்பி வைக்கட்டுமா?” என்று சண்டைக்கு இழுத்தான் கடையிலிருந்த முரடன் ஒருவன், அவ்வளவுதான்! ஏற்கனவே சூடு ஏறியிருந்த கதிரேசனுக்கு அதைக் கேட்டு இரத்தம் கொதித்தது. ‘இன்று கடையை அடைப்பவர்கள் என்றுமே திறக்க முடியாமற் போகும்! ஜாக்கிரதை’ என்று மல்லை இராவணசாமி கட்சியினர் போட்டியாக அச்சிட்டு ஒட்டிய விஷமத்தனமான சுவரொட்டி ஒன்றும் அந்தக் கடை முகப்பில் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்ததும் மாணவர்களின் கோபம் இன்னும் அடக்க முடியாததாகி விட்டது. அதே நேரத்துக்கு ஏற்கெனவே திட்டமிட்டு வைத்திருந்து தயாராகக் காத்திருந்து தாக்குவதுபோல் அந்த ஹோட்டல் மாடியிலிருந்து கீழே நின்ற மாணவர்கள் மேல் சோடாப்புட்டிகளும், கற்களும், திராவகப் பல்பு களும் வீசப்பட்டன. ஹோட்டல் மாடியிலிருந்து சோடாப் புட்டிகளும், திராவகப் பல்புகளும் வீசப்படுவதையும், மாணவர்களும் சிலர் அலறியபடி குருதி ஒழுக நிற்பதை யும் பாண்டியன் போலீஸாருக்குச் சுட்டிக் காட்டியும் பயனில்லை. அந்த ஹோட்டல் எல்லைக்குள் நுழைந்து அங்கே மறைந்திருந்த வன்முறைகள் புரியம் சமூக விரோதி களை விரட்டிப் பிடிக்காமல் போலீஸார் மரங்களாக நிற்பதைப் பார்த்து மாணவர்களுக்கு மேலும் ஆத்திரம் மூண்டது. தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லாத மாணவர்கள் பெருங்கூட்டமாக உடனே அந்த ஹோட்டலில் புகுந்து விட்டனர். உடனே பெருங் கலவரம் மூண்டது. ஹோட்டல் முகப்புக் கண்ணாடிகள், கிளாஸ்கள், மேஜை நாற்காலிகள் எல்லாம் தவிடு பொடியாயின. அப்போதும் விடாமல் டீக்கடை பாய்லர் வெந்நீரை மாணவர்கள் மேல் விசி ஊற்றினார்கள் கடையினுள்ளே இருந்த முரடர்கள். மாணவர்களும்