பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 3甘彗

விடவில்லை. மாடியில் ஏறி அங்கே ஒளிந்திருந்து சோடா பாட்டில்களையும் கற்களையும் திராவகப் பல்புகளையும் வீசிக் கொண்டிருந்தவர்களை மாணவர்கள் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார்கள். ஏராளமான சோடாப் பாட்டில்களையும், கற்குவியலையும் திராவகப் புட்டிகளை யும் அங்கே பதுக்கி வைத்திருந்ததையும் மாணவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள்.

ஹோட்டல் மாடியில் தங்களிடம் பிடிபட்ட குண்டர் களைத் தரதர வென்று நடு வீதி வரை இழுத்து வந்து போலீஸாரைக் கூப்பிட்டு அவர்களிடம் ஒப்படைத் தார்கள் மாணவர்கள். ஹோட்டல் முள்கரண்டி (ஃபோர்க்) யால் முரடன் ஒருவன் கதிரேசனின் விலாவில் குத்தியி ருந்தான். திராவகப் பல்பு, சோடாப்புட்டி வீச்சில் சில மாணவர்கள் காயமடைந்திருந்தார்கள். இரண்டொரு ஆசிரியர்களும் விரிவுரையாளர்களும்கூடக் காயமுற்றி ருந்தனர். இதையெல்லாம் பார்த்துக் கொதிப்படைந்த பொது மக்களும், தொழிலாளிகளும் அந்தக் கடையைத் தரை மட்டமாக்கும் வெறியோடு உள்ளே புகுந்து தாக்கத் தொடங்கினார்கள். அதுவரை சும்மா இருந்த போலீஸ் அப்போது வந்து கலைத்திராவிட்டால் அந்தக் கடை பிழைத்திருக்க முடியாது. இதற்குள் ஊர்வலத்தின் முன் பகுதியில் இருந்த மாணவிகளும் இரண்டு மூன்று வரிசை மாணவர்களும், போலீஸ் அலுவலக வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு நின்றார்கள். ஊர்வலத்தின் பிற்பகுதியில் ஹோட்டல் வாயிலில் மூண்ட கலவரம் இன்னும் இங்கே இவர்களுக்குத் தெரியாமலே இருந்தது. ஆகவே இவர்கள் அமைதியாக அட்டைகளைப் பிடித்தபடி எதிர்ப்புக் கோஷங்களை முழக்கிக் கொண்டு நின்றார்கள். ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு மகஜரை எடுத்துக் கொண்டு போய்க் கொடுக்க வேண்டிய பாண்டியன், மோகன்தாஸ், கதிரேசன் முதலியவர்கள் இன்னும் ஊர்வலத்தின் முன் பகுதிக்கு வந்து சேராததனால் காலங்கடந்து கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் ஹோட்டல் வாயிலில் நடந்த கலவரமும், அதனால் காயமும், அடி உதைகளும் பட்ட