பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 315

போல் ஆகிவிட்டிருக்கிறார்கள்” என்று மோகன்தாஸ் அதைச் சுட்டிக்காட்டிப் பாண்டியனிடமும் மற்ற மாணவர் களிடமும் சொன்னான். கையில் காமிராவோடு வந்திருந்த ஒரு மாணவன் போலீஸாரே ஜீப்புக்குத் தீ வைக்கும் காட்சியைப் படம் எடுக்க முற்பட்டபோது அந்தக் காமிரா போலீஸாரால் தட்டிப் பறிக்கப்பட்டது. அதிலிருந்து பிலிம் கருளை எடுத்த பின்புதான் காமிராவையே திரும்பக் கொடுத்தார்கள். தடியடிப் பிரயோகம், காயமடைந்த மாணவர்களின் நிலை, ஆம்புலன்லோ, போலீஸ் வேனோ கிடைக்காததால், தடுத்தெருவிலேயே அவர்களுக்குச் சிகிச்சை செய்ய முயன்ற மாணவிகளின் சிரமம் எல்லா வற்றையும் பார்த்து ஊர்வலத்தில் வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும், ஆசிரியர்களும், தொழிலாளிகளும் உணர்ச்சி வசப்பட்டார்கள். அந்த மக்கள் வெள்ளம் அப்போது ஒன்றாயிருந்தால் என்னென்ன நேருமோ என்று பயந்து மெல்ல மெல்லக் கூட்டத்தைக் கலைத்தார்கள் டோனீவார்.

நெடு நேரத்துக்குப் பின்பே காயமுற்ற மாணவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போக ஆம்புலன்ஸ், வேன் எல்லாம் வந்தன. ஆஸ்பத்திரியிலும் ஒரு தந்திரம் கையாளப் பட்டது. நாற்பத்தைந்து மாணவர்களில் முப்பது பேருக்கு மேல் வார்டில் அனுமதித்துச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நிலையில் இருந்தும்கூட அப்படிச் செய்யாமல் எல்லோரையும் உடனே, எதையோ சிகிச்சை என்ற பேரில் முடித்து வெளியே அனுப்பிவிட முயன்றார்கள். பத்திரிகை நிருபர்களோ, பொது மக்களோ வந்து பார்க்கும்படியும், பிற மாணவர்கள் காணும்படியும் வார்டில் மாணவர்கள் யாருமே தங்கிச் சிகிச்சை பெறாமல் பார்த்துக் கொண்டார்கள். யாருக்கும் எதுவும் அதிகச் சேதமில்லை என்று சொல்லவும் இது பயன்படும் என்று நினைத்தார் ஆர்.டி.ஓ. ஆஸ்பத்திரி வார்டில் இருந்த டாக்டர்களுக்கும் கூடப் போலிஸாரும் ஆர்.டி.ஓ.வும் இப்படிக் கூத்தாடித்தது பிடிக்கவில்லை. அவர்களுடைய அதுதாபமும் இரக்கமும்