பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 சத்திய வெள்ளம்

மாணவர்கள் மேலும் பேராசிரியர்கள் மேலுமே இருந்தன. இன்னும் பத்து நாட்கள் தங்கிச் சிகிச்சை பெறவேண்டிய அளவு வீரியஸ்ான நிலையிலிருந்த மாணவன் கூடச் சிகிச்சைக்குப்பின் உடனே விடுதிக்குத் திருப்பி அனுப்பப் பட்டான். தடியடிப் பிரயோகத்தில் காயமுற்ற இத்தனை மாணவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்’ என்பதாக எந்தப் பத்திரிகையிலும் செய்தி வந்துவிடக் கூடாதே என்பதற்காகத்தான் இது நடந்தது என்பதை எல்லாருமே புரிந்து கொண்டனர். எதிர்க்கட்சி பத்திரிகைகளில் இப்படி மாணவர்கள் ஆஸ்பத்திரியில் தங்கிச் சிகிச்சை பெறாமல் துரத்தப்பட்டது பற்றியும் செய்தி வெளிவர ஏற்பாடு செய்தான் பாண்டியன். திராவக வீச்சிலும் பஜார் ரோடு ஹோட்டல் கலவரத்தின் போதும் காயமுற்ற கதிரேசன் முதலியவர்களுக்குத் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அண்ணாச்சி அருகேயிருந்து கதிரேசனையும் மற்ற மாணவர்களையும் கவனித்துக் கொண்டார். பாண்டியனும் அவ்வப்போது போய்க் கவனித்தான். காலாண்டு விடுமுறைக்குப்பின் பல்கலைக் கழகம் திறந்த முதல் தினத்தன்று அவர்கள் நடத்திய இந்த ஊர்வலமும் போராட்டமும் வெற்றி பெற்றன. மறுநாள் காலைப் பத்திரிகையிலேயே அவர்கள் எதிர்பார்த்தபடி நடந் திருந்தது. பாலேஸ்வரியிடமும் பேராசிரியர் பூரீராமனிட மும் முறை தவறி நடந்து கொண்ட போலீஸ் இன்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். அரசாங்கம் விசார ணைக்கு உத்தரவிட்டிருந்தது. பல்கலைக் கழகம் திறந்த வுடனே முதல் வாரத்துக்குள் இருக்கும் என்று எதிர் பார்த்த பட்டமளிப்பு விழாவை இன்னும் பதினைந்து நாட்களுக்குத் தள்ளிப் போட்டிருந்தார் துணை வேந்தர், அமைச்சர் கரியமாணிக்கம் டாக்டர் பட்டம் பெற இருப்பதனாலும், பட்டமளிப்பு விழாப் பேருரை நிகழ்த்த இருப்பதாலும் மாணவர்கள் அதை எதிர்த்து ஏதாவது செய்யக் கூடும் என்ற சந்தேகம் துணைவேந்தருக்கு இருந்தது. சிண்டிகேட் உறுப்பினர் ஆனந்தவேலுவோ