பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 317

துணைவேந்தரை நெருக்கு நெருக்கென்று அவசரப்படுத்திக் கொண்டிருந்தார். பட்டமளிப்பு விழா தாமதமாகத் தாமதமாக அமைச்சரிடம் தமக்கு ஆகவேண்டிய காரிய மும் தாமதமாகுமே என்று பயந்து பதறினார் எஸ்டேட் அதிபர் ஆனந்தவேலு.

மாணவர்களின் கண்டன ஊர்வலமும், கடையடைப் பும் நடந்த தினத்துக்கு மறுநாள் பல்கலைக் கழக வகுப்புக்கள் எப்போதும்போல் நடைபெற்றன. மாணவர் கள் வகுப்புக்களுக்குச் சென்றனர். பல பத்திரிகைகள் தங்கள் கோரிக்கைகளின் நியாயங்களை எடுத்து எழுதி யிருந்தாலும், அரசாங்கம் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டி ருந்தாலும் மாணவியிடமும், பேராசிரியரிடமும், தவறாக நடந்து கொண்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப் பட்டிருந்ததாலும் இரண்டாம் நாள் வகுப்புக்களைப் புறக்கணிக்க விரும்பவில்லை அவர்கள். எனவே, அன்று பல்கலைக் கழகம் அமைதியாக நடந்தது. பிற்பகல் மூன்று மணிக்கு மோகன்தாஸையும். பாண்டியனையும் துணை வேந்தர் எதற்கோ கூப்பிட்டு அனுப்பினார். அவர்கள் இரு வரும் அவரைக் காணச் சென்றபோது அவர் காப்பி பருகிக் கொண்டிருந்தார். பியூனைக் கூப்பிட்டு அவர்களுக்கும் பிளாஸ்கிலிருந்து காப்பி உற்றிக் கொடுக்கச் சொல்லி உபசரித்தார் அவர். அந்த உபசாரம் வழக்கமில்லாத புதுமையாக இருந்தது.

“பட்டமளிப்பு விழா எல்லாம் வருகிறது. மாணவர்கள் எல்லாரும் ஒற்றுமையாயிருந்து யூனிவர்ஸிடியின் நற் பெயரைக் காப்பாற்றணும். பரஸ்பரம் நாம் ஒருவருக் கொருவர் புரிந்து கொள்ளணும். மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் எதுவும் கூடாது” என்று துணைவேந்தர் தொடங்கிய போது அதற்கு என்ன மறுமொழி கூறுவது என்பது புரியாமல் பாண்டியனும், மோகன்தாஸும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பட்டமளிப்பு விழாவின் போது மாணவர்கள் போராடுவார்களா இல்லையா என்பதை மகவும் தந்திரமாகத் தங்களிடமிருந்து அவர்