பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 சத்திய வெள்ளம்

அறிந்து கொள்ள முயல்வது அவர்களுக்குப் புரிந்தது. ‘எதையும் சொல்லிவிடாதே என்பது குறித்துப் பாண்டியன் மோகன்தாஸின் காலை மிதித்து நினைவூட்டினான். மோகன்தாஸ் உஷாரானான். அவர்களிடமிருந்து எதையும் அவரால் அறிந்துகொள்ள முடியவில்லை. பேச்சை வேறு திசைக்கு மாற்றி ஹாஸ்டல் வசதிகள், உணவு, விடுதிகள் பற்றி அவர்களை மிகவும் அக்கறையாகக் கேட்டார் துணைவேந்தர்,

“ஏதாவது குறைகள் இருந்தால் என்னிடம் நீங்கள் உடனே தயங்காமல் சொல்ல வேண்டும்” என்றார். வழக்கத்தை மீறிய சுபாவத்தோடு அவர் பேசியது அவர் களுக்குப் புதுமையாயிருந்தது. ஜாடைமாடையாக எதை அவர் தங்களிடமிருந்து தெரிந்து கொள்ள முயன்றாரோ, அதைத் தவிர மற்ற எல்லாப் பதில்களையும் அவருக்குச் சொன்னார்கள் பாண்டியனும், மோகன்தாஸும்.

“முன் வருடங்களில் செய்ததுபோல் பட்டம் பெறும் மாணவர்களைத் தவிர நம் யூனிவர்ஸிடியில் இப்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் பட்ட மளிப்பு விழாப் பேருரையைக் கேட்பதற்குப் பாஸ்கள் தருவதை நிறுத்திவிட நினைக்கிறேன். உங்கள் அபிப் பிராயம் என்ன? பட்டம் பெற வருகிற மாணவர்களின் கூட்டமே அதிகம். ஹாலில் இடமோ ரொம்பக் குறைவு. பட்டம் பெறாமல் இப்போது இங்கே படிக்கிற நீங்களெல் லாம் போய் அங்கே அடைத்துக் கொள்ளாது இருந்தால் பட்டம் பெற வருகிறவர்களாவது தாராளமாக உட்கார முடியும் அல்லவா?”

“செளகரியம் போல் செய்யுங்கள், சார்! இட வசதி எப்படியோ அப்படித்தானே நீங்கள் ஏற்பாடு செய்யலாம்?” என்று இதற்கு மறுமொழி கூறும்போதும் பட்டுக் கொள்ளாமல் மறுமொழி கூறினார்கள் அவர்கள். பட்ட மளிப்பு விழாவின்போது மாணவர்கள் பட்டமளிப்பு விழா மண்டபத்துக்குள் வருவதற்குப் பாஸ் வேண்டும் என்பதில்