பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 சத்திய வெள்ளம்

“ஒரு காரியம் செய்யேன்! நாளைக் காலையில் எட்டரை மணிக்கு வார்டனிடம் அனுமதி வாங்கிக் கொண்டு நீ இவள் புறப்படுகிற இடத்துக்குப் போய் இவளுடனேயே பஸ்ஸில் அங்கிருந்து புறப்பட்டு வா. பத்து மணிக்கு அந்த பஸ் இங்கே யூனிவர்ஸிடி டெர்மினஸ்ஸில் வந்து நிற்கிற இடத்திலே நானும் நாலைந்து மாணவர்களும் தயாராகக் காத்திருக்கிறோம். கோளாறாக ஏதாவது நடந்திருந்தால் எங்ககிட்டச் சொல்லு. அப்பவே அங்கேயே அந்தக் கண்டக்டரிடம் விசாரிக்கிறோம். அவன் தன்னோட தப்பை ஒப்புக்கொண்டு இனிமே அப்பிடி நடக்கலேன்னு மன்னிப்புக் கேட்டா விட்டுவிடலாம். இல்லேன்னா அவனைக் கவனிக்கிற விதமாகக் கவனிப்போம். நாளைக் காலையிலே நீ அங்கே போகணும். போறியா?” என்றான் பாண்டியன்.

கண்ணுக்கினியாளும் அவன் கூறியபடியே செய்ய இணங்கினாள். கண்ணுக்கினியாளை நோக்கிக் கூச்சத் தோடும் பயத்தோடும், ‘இதெல்லாம் வேண்டாம் என்னாலே உனக்கெதுக்கு வீண் சிரமம்?” என்று ஒதுங்க முயன்றாள் அந்தப் பெண் பத்மா.

“இப்பிடிக் கூசி ஒதுங்கினால் பயனில்லை. ஒதுங்கு கிறவர்கள் எதிலும் ஒதுக்கப்படும் காலம் இது. பொறுத்துக் கொள்கிறவர்களின் பொறுமையே மேலும் மேலும் சோதிக் கப்படுகிற காலத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பது தவிரப் பொறுமையைக் கைவிடவும் நமக்குத் தெரிய வேண்டும்” என்று உடனே பாண்டியன் முன்னிலையில் அவளைக் கண்டித்தாள் கண்ணுக்கினியாள்.

இருபத்து ஆறாவது அத்தியாயம்

நகரின் பல பகுதிகளிலிருந்து பல்கலைக் கழக எல்லைக் குள் வரும் டவுன் பஸ் ஊழியர்களுக்கும், மாணவர்களுக் கும் பலமுறை மோதல்கள் வந்திருக்கின்றன. எல்லா மோதல்களுக்கும் ஒரு சிறிய பூசலே காரணமாயிருக்கும்.