பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 சத்திய வெள்ளம்

எப்படியாவது மாணவர்களை அமைதியடையச் செய்ய முயல்வதாகத் தெரிந்தது. ஊர்வலத்தன்று பஜார் ரோடு ஹோட்டலில், முரட்டுத்தனமாக நடந்து கொண்டவர் களில் சிலரைக் கைது செய்து போலீஸார் வழக்குத் தொடர்ந்திருந்தார்கள். மாணவர்கள் மேல் தடியடிப் பிரயோகம் நடந்ததைப் பற்றி நீலிக்கண்ணிர் வடித்து விட்டு ஒரு நீதி விசாரணைக்கும் உத்தரவிட்டிருந்தது அரசாங்கம். மாணவர்கள் மேல் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. வரப்போகிற பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் கரியமாணிக்கம் டாக்டர் பட்டம் பெறும் போது மாணவர்களால் எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாது என்பதையும் மனத்தில் வைத்துக் கொண்டு அரசாங்கமும், பல்கலைக் கழக நிர்வாகமும் காரியங் களைச் செய்வது, புரிந்தது. ஆனாலும் துணைவேந்தர் ஊர்வலத்தில் ஹோட்டல் முன் சோடாப்புட்டி வீச்சினால் காயமடைந்த மாணவர்களையோ, தடியடிப் பிரயோகத் தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களையோ சந்தித்து ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் கூடச் சொல்லவில்லை. மாணவர்கள் காரணமின்றித் தாக்கப்பட்டது பற்றி வருத்தம் தெரிவிக்கவும் இல்லை. தன்னையும், மோகன் தாஸையும் கூப்பிட்டுப் பேசியபோதுகூட அவர் அனுதாப வார்த்தைகள் எதையும் தங்களிடம் கூறவில்லை என்பதை நினைத்தபோது பாண்டியனுக்கு வருத்தமாக இருந்தது. இந்த நிலையில் பல்கலைக் கழக எல்லைக்குள் வரும் டவுன் பஸ் ஊழியர்களில் சிலர் மாணவ மாணவிகளிடம் முறையின்றி நடந்து கொள்கிறார்கள் என்பதைத் துணைவேந்தரிடம் புகார் செய்து அதன் மூலம் பரிகாரம் தேடமுடியாது என்பது அவனுக்குத் தெளிவாக விளங்கி விட்டது. இதைப்பற்றிச் சிந்தித்தபடியே வகுப்புக்குப் போனான் அவன். முதற்பாட வேளை ஆங்கில வகுப்பு. விரிவுரையாளர் காமாட்சிநாதன் ஷேக்ஸ்பியரைக் கரைத்துக் குடித்தவர். சாவிகொடுத்த யந்திரம் போல் நாற்பத்தைந்து நிமிஷம் சொற்பொழிவு செய்வார். கடைசிப்