பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 325

களில் யார் யார் இயக்கங்களுக்கும், போராட்டங்களுக்கும் காரணமான ரிங்-லீடர்ஸோ அவங்களை எல்லாம் ஏதாவது குற்றம்சாட்டி, சஸ்பெண்ட் செய்வது; அல்லது போலீஸ் கேஸில் மாட்டி விட்டுப் பட்டமளிப்பு விழா முடிகிறவரை உள்ளே தள்ளிவிடுவது என்ற ஏற்பாட்டில் இங்கே காரியங்கள் இரகசியமாக நடக்கின்றன. நீயும், உன் சகாக்களும் கவனமாக இருக்க வேண்டும். இதைச் சொல்வதற்காகத்தான் வரச் சொன்னேன். நீங்கள் நடத்திய கண்டன ஊர்வலங்களில் பெருவாரியான ஆசிரியர் களைக் கலந்து கொள்ளச் செய்தேன் என்பதனால் என் மேலேயே வி.ஸி.க்கு ரொம்பக் கோபம். எனக்கும் ஏதேதோ இடைஞ்சல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நான் எதற்கும் பயப்படவில்லை. என்னால் அவரைப் போல் கண்ணெதிரே நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டு மரக்கட்டையாகச் சும்மா இருக்க முடியாது.”

பாண்டியன் அவருடைய அன்பான எச்சரிக்கைக் காக அவருக்கு நன்றி தெரிவித்தான். மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அடுத்த வகுப்புக்குப் புறப்பட்டான் அவன். பிற்பகலில் மாணவ நண்பர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு அண்ணாச்சி கடைக்குச் சென்று பேராசிரியர் பூதலிங்கம் கூறிய எச்சரிக்கையைத் தெரிவித்துக் கலந்தாலோசித்தான் அவன். நண்பர்கள், “எது வந்தாலும் கவலை இல்லை அநீதிகளை எதிர்த்தே ஆக வேண்டும்” என்றார்கள். அன்று விடுதியில் மாணவர் களுக்கு வாராந்தர ஃப்ரீ நைட் ஆகையால் முக்கால்வாசி மாணவர்கள் வெளியே திரைப்படம் பார்க்க வந்தி ருந்தார்கள். பேச்சுப் போக்கில் நேரம் அதிகம் ஆகிவிட்ட தனால் பாண்டியன், அன்றிரவு அண்ணாச்சி கடை ‘யிலேயே தங்கிவிட்டான். மறுநாள் காலை ஆறு மணிக்கே எழுந்து அவன் விடுதி அறைக்கு வந்த போது லேடீஸ் ஹாஸ்டலிலிருந்து ஃபோன் வந்ததாக அறை நண்பன் பொன்னையா கூறினான்.