பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 சத்திய வெள்ளம்

கண்ணுக்கினியாள்தான் ஃபோனில் கூப்பிட்டிருக்க முடியும் என்ற அநுமானத்தோடு பாண்டியன் வராந்தா வுக்குச் சென்று லேடீஸ் ஹாஸ்டலுக்குப் ஃபோன் செய் தான். நல்ல வேளையாக அவன் கூப்பிடுவதை எதிர் பார்த்து அவள் ஃபோன் அருகிலேயே இருந்தது வசதி யாகப் போயிற்று. தான் மாணவி பத்மாவின் வீட்டுக்குப் போய் அவளோடு சேர்ந்து பஸ்ஸில் புறப்பட்டு வருவதா கவும், பஸ் டெர்மினஸ் அருகே காத்திருக்க வேண்டும் என்பதை ஞாபகப்படுத்தவே அவனுக்கு ஃபோன் செய்ததா கவும் அவள் கூறினாள். அதோடு அன்றிரவு ஃபைன் ஆர்ட்ஸ் ஃபேகுல்டியில் உள்ள லிட்டில் தியேட்டரில் ‘டிப்ளமா இன் டிராமா’ பிரிவில் படிக்கும் மாணவ மாணவிகளுக்குச் சில விளக்கங்கள் தருவதற்காக ஒரு கதகளி நாடகமும், ஒரு குறவஞ்சி நாடகமும் நடக்க இருப்பதாகவும், குறவஞ்சி நாடகத்தில் தான் குறத்தியாக நடிக்க இருப்பதாகவும் சொல்லி அவன் அதற்கு வரவேண்டும் என்றாள் அவள். அவன் மகிழச்சியோடு அதற்கு இசைந்தான். காலை ஒன்பதே முக்கால் மணிக்கு பஸ் டெர்மினஸ் அருகே மாணவர்களோடு காத்திருப்ப தாகவும் கூறினான். அவள் ஃபோனை வைத்தாள். அவன் அவளோடு பேசி முடித்த மன நிறைவுடன் குளிப்பதற் காகப் போனான். ஏழரை மணிக்கு அவனும் பொன்னை யாவும் சேர்ந்து போய் மெஸ்சில் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு வந்தார்கள். மெஸ் வாசலிலேயே ஒன்பதே முக்கால் மணிக்குப் பஸ் டெர்மினஸில் வந்து நிற்க வேண்டும் என்பதைக் காதும் காதும் வைத்தாற்போல் பல மாணவர்களுக்குச் சொல்லிவிட்டார்கள் அவர்கள். பாண்டியனும் பொன்னையாவும் அறைக்குத் திரும்பி அவரவர் பாடங்களை ஒரு மணி நேரம் படித்தார்கள். திடீரென்று தான் பல்கலைக் கழக நூலகத்திலிருந்து எடுத்து வந்திருந்த ஆங்ரி யங் மென்’ என்ற புத்தகத்தைப் பிரித்து அதன் முன்னுரையில், “எதிலும் விட்டுக் கொடுக் கும் மனப்பான்மை அதிகமாயிருக்கும் முதியவர்கள் நிறைந்த சமூகத்தில் எதிலும் பிடிவாதம் அதிகமா