பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 327

யிருக்கும் இளைஞர்கள் உருவாவதைத் தவிர்க்க முடியாது. அந்தப் பிடிவாதமே இந்த நூற்றாண்டின் வரப்பிரசாதம்” என்ற பொருள்படும் ஆங்கில வாக்கியங்களைப் பாண்டி யனிடம் சுட்டிக்காட்டினான் பொன்னையா.

“இந்தப் புத்தகம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு பாண்டியன்! நீயும் படி. அப்புறம் திருப்பிக் கொடுக்க லாம்” என்றான் அவன்.

“இதை இந்தப் புத்தகத்திலிருந்து தான் தெரிஞ்சுக் கணுமா பொன்னு: ரொம்ப நாளா மணவாளன் இதை என்னைப் பார்க்கறப்ப எல்லாம் சொல்லிக்கிட்டிருக்காரு. நிதானம் அளவு மீறினால் அதுவே மந்தம். வீரம் அளவு மீறினால் அதுவே முரட்டுத்தனம். இலட்சியம் அளவு மீறினால் அதுவே அலட்சியம். பிரியம் அளவு மீறினால் அதுவே பேராசை என்றுதான் சில தொடக்கங்களுக்கு முடிவுகளே ஏற்பட முடியும்” என்று ஆரம்பித்துப் பேசத் தொடங்கிய பாண்டியன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “நேரமாச்சு! புறப்படு, போகலாம்” என்று சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பத் தயாரானான். அவனும், பொன்னையாவும் மற்றும் சில மாணவர்களும் பஸ் டெர்மினஸ்-க்குப் போய்ச் சேர்ந்தபோது ஏற்கெனவே சொல்லி வைத்திருந்தபடி நிறைய மாணவர்கள் அங்கே கூடியிருந்தார்கள். ஒன்பது ஐம்பத்தைந்துக்கு வரவேண்டிய நேரத்துக்கு ஐந்து நிமிஷம் முன்னதாகவே அந்தப் பஸ் வந்தது. எல்லாக் கூட்டமும் பஸ்ஸைச் சூழ்ந்துகொண்டது. கண்ணுக்கினியாளும் அந்த மாணவி பத்மாவும் இறங் கினார்கள். நடந்ததைப் பாண்டியனிடம் கண்ணுக் கினியாள் சுருக்கமாகச் சொல்லி இரண்டொரு சக பிரயாணிகளையும் கூப்பிட்டுச் சாட்சியத்தோடு அதை நிரூபித்தாள். உடனே மாணவர்கள் அந்தப் பஸ்சின் கண்டக்டர் டிரைவரை வளைத்துக் கொண்டு மாணவி களிடம் தவறாக நடந்து கொண்டதற்காக மன்னிப்புக் கேட்கும்படி அவர்களைக் கோரினார்கள். டிரைவர் கொஞ்சம் நல்ல விதமாகப் பேசினான். கண்டக்டரை மன்னிப்புக் கேட்கச் சொல்லி அவனே வற்புறுத்தினான்.