பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 சத்திய வெள்ளம்

களைப் பார்த்து, “மாணவர்களே அவர் நம்மை மதித்துப் பார்த்து நாம் சொல்வதைக் கேட்கிறவரை எவ்வளவு நேரமானாலும் இங்கிருந்து நாம் நகரக் கூடாது” என்று இரைந்து சொன்னான். மணி பன்னிரண்டாயிற்று. ஒன்று, இரண்டு என்று பகல் நேரமாகியும் மாணவர்களும் நகர வில்லை. எம்.எல்.ஏ.யும் வெளியே வரவில்லை. மூன்று மணிக் குக் கூர்க்கா வந்து மாணவர்களை வெளியேறச் சொல்லிக் கத்திக் கூப்பாடு போட்டான். மாணவர்கள் அசைய வில்லை. கோஷங்களை முழக்கினார்கள். பசி, தாகத்தைப் பொருட்படுத்தாமல் எண்பது மாணவர்கள் அங்கே மறியல் செய்து கொண்டிருந்த செய்தி பல்கலைக் கழகத் துக்கு எட்டியதால் மேலும் மாணவர்கள் கூட்டம் கூட்ட மாக வரத்தொடங்கியிருந்தார்கள். “உங்கள் பஸ் ஊழயர் களைத் தயவு செய்து மாணவர்களிடமும் பொதுமக்களிட மும் மரியாதையாக நடந்து கொள்ளச் சொல்லுங்கள். அது போதும்” என்று தாங்கள் வேண்டப் போகிற ஒரு வேண்டு தலைக் கேட்கக்கூட மறுக்கும் அளவு மல்லை இராவண சாமி முரண்டு பிடிப்பதை மாணவர்கள் வெறுத்தனர். இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று அந்தப் பங்களாக் காம்பவுண்டிலேயே உட்கார்ந்துவிட்ட மாணவர்களை என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளே யிருந்த மல்லை இராவணசாமி திகைத்தார். மாணவர் களைச் சந்தித்துப் பேசி சமரசமாகப் போக முடியாமல் வறட்டு ஜம்பம் அவரைத் தடுத்தது. போலீஸுக்குப் ஃபோன் செய்து மாணவர்கள் தம் வீட்டில் டிரஸ் பாஸ் செய்திருப்பதாகப் புகார் கொடுக்கவும் தயக்கமாக இருந்தது. அதனால் மாணவர்களை மேலும் விரோதித்துக் கொள்ள நேருமோ என்று பயமாகவும் இருந்தது. துணைவேந்தருக்குப் போன் செய்தார் இராவணசாமி. துணைவேந்தர் ஃபோனில் கிடைக்கவில்லை. பல்கலைக் கழகத்தில் பதிவாளர் மட்டுமே இருந்தார். அவரிடம் துணைவேந்தர் வந்ததும் தமக்குப் ஃபோன் செய்யச் சொல்லும்படி தகவல் தெரிவித்த இராவணசாமி பேசாமல் கொல்லைப்புற