பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 சத்திய வெள்ளம்

செய்யப்பட்டிருந்ததன் காரணத்தால் இறுதி வரை இருந்துவிட்டுப் போக வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து அவள் மீள முடியவில்லை. நிகழ்ச்சி முடிந்ததும் ஃபைன் ஆர்ட்ஸ் டிபார்மண்ட் புரொபஸர் அறையிலிருந்தே அண்ணாச்சி கடைக்கு ஃபோன் செய்தாள் அவள். கடை மூடியிருப்பதாகச் சொல்லி மருந்துக் கடையில் ஃபோனை வைத்துவிட்டார்கள். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருந்தது அவளுக்கு உடனிருந்த மற்றவர்கள் தனது பரபரப்பைப் புரிந்து கொள்ளாமல் அதை இரகசியமாகக் காப்பதுகூட அப்போது அவளாலேயே முடியாததாயிருந்தது.

இருபத்து ஏழாவது அத்தியாயம்

குறவஞ்சி, கதகளி நிகழ்ச்சிகள் முடிந்த பின்பும்கூட, கண்ணுக்கினியாள் அங்கிருந்து உடனே வெளியேறிச் செல்ல முடியாமல் இருந்தது. அவளுடைய உணர்வுகள் மற்றவர்களுக்குப் புரியவில்லை; மற்றவர்களுடைய உணர்வுகளோடு அவளால் இரண்டறக்கலக்க முடிய வில்லை. மனம் போயிருக்கிற இடத்துக்கு உடம்பு போக முடியாமலும் உடம்பு தங்கியிருக்கிற இடத்தில் மனம் இல்லாமலும் அவள் அங்கே அப்போது தவித்துக் கொண்டு இருந்தாள். பாண்டியன் போயிருக்கிற இடத்தில் என்ன நடக்குமோ, ஏது ஆகுமோ என்ற எண்ணங் களிலேயே இருந்ததால் மற்றவர்கள் தன்னிடம் எதைக் கேட்கிறார்கள், அதற்குத் தான் என்ன பதில் சொல் கிறோம் என்ற பிரக்ஞையே அவளுக்கு இல்லை. ஆனாலும் மற்றவர்கள் தன்னை நோக்கி முகம் மலர்ந்த போது அவளும் பதிலுக்கு முகம் மலர்ந்தாள். மற்றவர்கள் தன்னிடம் எதையாவது பேசியபோது அவளும் அதற்குப் பதிலாக எதையோ சொன்னாள். நிகழ்ச்சிகள் நிறைவேறிய பின்பும், கதகளி குழுவினருக்கும், பிற முக்கியமானவர் களுக்கும் ஒரு விருந்து கொடுக்க ஏற்பாடாகியிருந்தது.