பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தச்ாரதி 335

விரட்டியிருக்கிறார்கள். கண்ணுக்கினியாளும் அவளுடைய அறைத் தோழியும் மெஸ்ஸிலே அமர்ந்து காப்பி குடித்துக் கொண்டிருந்த போது சக மாணவிகள் சுற்றிலும் சூழ்ந்து கொண்டு இந்த விவரங்களையெல்லாம் சொன்னார்கள். பாண்டியனுக்கும் மாணவர்களுக்கும் எந்த அபாயமும் நேரவில்லை என்று அறிந்த பின்பே அவள் நிம்மதி அடைந்தாள்.

“இவ்வளவு நடந்திருக்கிறதே, வி.சி.ஏன் வாயை மூடிக் கொண்டு சும்மா உட்கார்ந்திருக்கிறார்? மாணவர்கள் பஸ் ஊழியர்கள் தங்களிடம் மன்னிப்புக் கோரவேண்டி இராவணசாமியின் பங்களா வாசலில் மறியல் செய்த போது வி.சி. ஏன் போய் தலையிடவில்லை ? நமக்காக இல்லாவிட்டாலும் ஆளும் கட்சிப் பிரமுகர் இராவண சாமிக்காகக்கூட அவர் பரிந்துகொண்டு வரவில்லையே, ஏன் ?”

“நேற்று முழுவதும் வி.சி. யூனிவர்ஸிடி பக்கமே வரவில்லை! லேக்வியூ ஹோட்டலில் ஏதோ செமினாராம். அங்கேயே இருந்துவிட்டார்.”

“இந்த மாதிரி நேரங்களில் தப்பி நழுவுவதற்கு அவருக்கு எப்போதும் இப்படி ஏதாவது ஒரு செமினார் இருக்கும்” என்றாள் ஒரு மாணவி. அவள் குரலில் கேலி நிரம்பியிருந்தது.

காப்பியை முடித்துக்கொண்டு காலை எட்டுமணிக்கு மெஸ்ஸிலிருந்து திரும்பிய சிறிது நேரத்துக்கெல்லாம் பாண்டியனிடமிருந்தே அவளுக்கு ஃபோன் வந்தது.

“நம்முடைய போராட்டம் வெற்றியாக முடிந்து விட்டது. ரொம்ப நேரம் மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த இராவண சாமி கடைசியில் விட்டுக்கொடுத்து இறங்கிவர வேண்டிய தாகிவிட்டது. அந்தக் கண்டக்டரையே வரவழைத்து எங்களிடம் மன்னிப்புக் கேட்கவைத்து நாங்கள் கோபப் படாமல் வெளியேறச் செய்தபின் பின்னாலேயே