பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 - சத்திய வெள்ளம்

சிறுத்தைகள்தான் அவர்கள் துண்டுப்பிரசுரங்களில் எழுதப்படுகின்றன. புதிதாக எதுவுமில்லை.”

“தங்கத்தைத்தான் மொரார்ஜி தேசாய் பதினாலு காரட் ஆக்கிவிட்டாரே, இங்கே கூட மல்லிகைப் பந்தலில் நகைப் பட்டறை வைத்திருந்த பத்தர் ஒருத்தர் மொரார்ஜி சுண்டல்’ என்று மாலை வேளைகளில் பார்க்கில் சுண்டல் வியாபாரம் செய்கிறார்!”

பாண்டியன் குறுக்கிட்டு இடைமறித்தான். “அவர்கள் தந்திரத்தைப் பார்த்தீர்களா? சோற்றுக்குத் திண்டாடுகிறவர்களுக்கு நடுவே அவர்கள் தங்கத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். வேலை வாய்ப்பில்லாத இளைஞர் களுக்கு நடுவே அவர்கள் மொழியின் பழம் பெருமைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.”

இப்படியே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தபின் பாண்டியனும் நண்பர்களும் ஈஸ்டர்ன் ஹாஸ்டலில் அறை அறையாக நேரில் சென்று மாணவர்களைச் சந்தித்து வோட்டுக் கேட்கும் திட்டத்துடன் புறப்பட்டனர். போகிற வழியில் பெண்கள் விடுதிக்கு முன்னாலிருந்த பூங்காவில் தற்செயலாக அவன் கண்ணுக்கினியாளை அவள் தோழிகளோடு சந்திக்க நேர்ந்தது. “அண்ணாச்சி எல்லாம் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். பெண்கள் விடுதியில் பிரச்சாரம் முழுவதும் உங்கள் பொறுப்பு” என்றான் பாண்டியனோடு வந்த மாணவர் களில் ஒருவன். அவள் புன்னகையோடு சம்மதத்துக்கு அறிகுறியாகத் தலையசைத்தாள். -

“நாங்கள் கிழக்கு விடுதியில் மாணவர்களைப் பார்க்கப் போகிறோம்” என்று சொல்லிவிட்டுப் பாண்டியன் அவளிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட இருந்த போது, - - - - *

“ஒரு நிமிஷம் @ು-4 வாருங்கள்! உங்களிடம் தனியே கொஞ்சம் பேசவேண்டும்” என்றாள் அவள். பாண்டியனுக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. உடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/34&oldid=609615" இலிருந்து மீள்விக்கப்பட்டது