பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 சத்திய வெள்ளம்

மாணவ மாணவிகள் குரல் எழுப்பினார்கள். எதிர்ப்பைக் கண்டு பேச்சைச் சுருக்கமாக முடித்துக் கொண்டு தம் அறைக்குப் போய்விட்டார் துணைவேந்தர், முதல் பாட வேளை இதில் போய் விட்டது. துணைவேந்தரின் மைதானக் கூட்டம் முடிந்து கலையும் போது பாண்டியனை மீண்டும் சந்தித்து, “இன்று பகல் காட்சிக்கு ‘ஹில்வியூ தியேட்டரில் ஆங்கிலப்படம் பார்க்கப் போக வேண்டும்! இரண்டரை மணிக்கு உங்களை யூனிவர்ஸிடி லைப்ரரி வாசலில் சந்திக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவன் பதிலைக்கூட எதிர்பாராமல் மற்ற மாணவி களோடு போய்விட்டாள் கண்ணுக்கினியாள். இரண்டா வது பாட வேளையில் அவளுக்குத் தோற்பாவைக்கூத்து’ ‘குறவஞ்சி நாடகங்கள் போன்ற ஆரம்ப கால நாடகங் களினது நிலை குறித்து விரிவுரை நடந்தது. அதே வேளை யில் பாண்டியனுக்கு வரலாற்றுப் பாடம். வரலாற்று விரிவுரையாளர் சபாபதி கால்மணி நேரம் பேசினாலும் அதில் இந்தக்கால கட்டத்திலே என்ற தொடர் பதினைந்து முறையாவது திரும்பத் திரும்ப வரும். அன்று அவர் வகுப்புக்குள் நுழையுமுன்னேயே போர்டில் சாக்பீஸால், இந்தக் கால கட்டம் நீங்கள் வரலாற்று விரிவுரையாளரால் அறுக்கப்படுவதற்குரியது. உங்களுக்கு மனமார்ந்த அது தாபங்கள் - என்று பெரிதாக எழுதிப் போட்டிருந்தான் யாரோ ஒரு குறும்புக்கார மாணவன். உள்ளே நுழைந்து பொறுமையாகப் பிளாக் போர்டில் இருந்த அந்த வாக்கியத்தை அழித்துவிட்டு விரிவுரையைத் தொடங் கினார் அவர் வகுப்பு, பாட வேளைக்கான முழு நேரத்துக்கு முன்பே முடிந்துவிட்டது. மூன்றாவது பாட வேளைக்கான பேராசிரியர் அன்று வரவில்லை. மாணவர்கள் எல்லோரும் நேரே பகல் உணவுக்காக மெஸ்ஸ்-க்குப் போய் விட்டார்கள். மெஸ்ஸில் உள்ளே வந்திருந்த சில மாணவர் கள் இன்னும் உள்ளே வராத தங்கள் நண்பர்களுக்காகச் சாவிக் கொத்து, கைக்குட்டை, புத்தகங்களை வைத்து உட்காரும் இடங்களை ரிசர்வ் செய்திருந்தார்கள்.