பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 சத்திய வெள்ளம்

“தப்பு: நான் இன்னும் மெட்டி அணியவில்லை.” “அதனாலென்ன ? சீக்கிரம் அணியச் செய்து விட்டால் போகிறது.”

அந்தக் கவிதையைப் பாண்டியன் தன்னிடம் கூறியது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது என்பது அவள் முகத்தில் இங்கித நளின உணர்வுகளிலிருந்து புரிந்தது. ஹில்வியூ தியேட்டர் வாசலுக்கு அவர்கள் போகும்போது படம் தொடங்க இன்னும் அரை மணி இருந்தது. நேரம் போக வேண்டுமே என்பதற்காக எதிரே இருந்த காப்பி ஹவுஸில் நுழைந்து அவன் தனக்குத் தேநீரும் அவளுக்கு அவள் கேட்டபடி காப்பியும் ஆர்டர் செய்தான். கொண்டு வந்து வைத்த சர்வர் தேநீரை அவள் முன்பும் காப்பியை அவன் முன்பும் மாற்றி வைத்துவிட்டான். பேச்சு சுவாரசி யத்தில் இருவருமே அதைக் குடிக்கத் தொடங்கி ஒரு மடங்கு உள்ளே போனதும்தான் இந்த மாற்றம் தெரிந்தது. “அடடா இது காப்பி!. நான் டீ தான் கேட்டேன்” என்று மீதிக் காப்பியை அப்படியே கோப்பையோடு மேஜையில் வைத்தான் பாண்டியன், தேநீரை ஒரு மடக்குப் பருகியிருந்த அவளும் மீதித் தேநீரோடு கோப்பையை அவனருகே நகர்த்தினாள். இருவரும் ஒருவரையொருவர் குறும்புத்தனமாகப் பார்த்தபடி கோப்பைகளை மாற்றிக் கொண்டு அப்புறம் பருகினார்கள். பாண்டியன் குறும்பாக அவளிடம், “இனி நாம் ஒவ்வொரு தடவை இங்கே வரும் போதும் இந்த சர்வர் இப்படியே மாற்றிக் கொடுத்தால் அவனுக்கு நிறைய ‘டிப்ஸ் தரலாம்” என்றான். அவள் சிரித்தாள். அந்த வேளையில் அவர்களுக்கு உள்ளே இனிய உணர்வுகள் நிறைந்திருந்தன. மனம் இரண்டுமே ஒன்றாகி ஒரே விதமான உணர்வுகளால் இணைக்கப்பட்டதுபோல் இருந்தது. உள்ளுறக் கனிந்து ததும்பும் அளவற்ற பிரியத்தை எப்போதும் வார்த்தைகளால் சொல்லிக் கொள்வதற்கு முயல்கிறோமோ அப்படிச் சொல்லிக் கொள்வதற்கு முயலும் முதல் விநாடியிலேயே அதன் மேல் செயற்கை நிழல் வந்து படர்ந்து விடுகிறது என்பதை உணர்ந்தவர்கள்