பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 343

கைக்குட்டையும் அரை அடி ஸ்கேலுமாக எதேச்சையாக நிற்பதுபோல் நின்ற பல மாணவிகளும், கண்ணுக்கினி யாளும் மந்திரியின் ஜீப் அருகே நெருங்கியதும் இடுப்பில் மறைத்திருந்த கறுப்புத் துணிகளை எடுத்து ஸ்கேல் துனியில் செருகி நீட்டி எதிர்ப்புக் குரல்களை முழங் கினார்கள். மாணவர்களை அவமதிக்கும் மந்திரியே திரும்பிப்போ, ‘மாணவர்கள் உரிமைகளைப் பறிக்கு முயலும் எதேச்சாதிகாரியே! திரும்பிப் போ- என்று குரல்கள் எழுந்த சுவட்டோடு கறுப்புக் கொடிகள் திடீ ரென்று முளைத்ததும் பெரிய போலீஸ் அதிகாரி ஒருவர் ஒடி வந்து கைகளை உயர்த்திக் கூப்பாடு போட்டு மாணவி களை மிரட்டி அனுப்ப முயன்றார். கண்ணுக்கினியாள் அவரிடம் கூறினாள்: “எங்களை நீங்கள் தடுக்க முடியாது! ஜனநாயக நாட்டில் இந்த உரிமை எங்களுக்கு உண்டு. இப்போது ஜீப்பில் போகிற இதே மந்திரி முன்பு பதவிக்கு வராத காலத்தில் மனித குல மாணிக்கம் நேருவுக்கே, அவர் சென்னை வந்தபோது கறுப்புக் கொடி காட்டி யிருக்கிறார். இப்போது தமக்குக் கறுப்புக் கொடி காட்டு கிறவர்கள் மேல் இவர் கோபப்படுவானேன்? சரித்திரம் திரும்புகிறது.”

ஒன்றும் செய்யத் தோன்றாத போலீஸ் அதிகாரி மாணவிகளை அமைதியாகக் கலைந்து போகுமாறு நயமாக வேண்டினார். “மாணவிகளாகிய நீங்கள் மாணவர்களைப் போல் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக்கூடாது. உங்களிடம் இப்படிப்பட்ட அநாகரிகமான காரியங்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்றார். .

“அதனால்தான் நாங்கள் இதைச் செய்கிறோம். நீங்கள் எதிர்பார்ப்பதை மட்டுமே நாங்கள் எப்படிச் செய்ய முடியும்?” என்று அவரிடம் பதிலுக்குக் கேட்டாள் கண்ணுக்கினியாள். போலீஸ் அதிகாரி பேசாமல் விலகி நின்று விட்டார். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்தது. ஆனால் அந்தப் போலீஸ் அதிகாரி கோபத் தோடு கண்ணுக்கினியாளின் பெயரை விசாரித்துக்