பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 345

பார்த்துக்கொள்! ஐயாம் ஏ லிட்டில் அஃப்ரைட் ஆஃப் யூ! பீ கேர் ஃபுல்! எனி ஹெள.”

கண்ணுக்கினியாள் இதற்குப் பதிலே சொல்லவில்லை. பெண்கள் விடுதிகளிலிருந்து எந்த மாணவி வகுப்புக் களுக்குத் தவிர வேறு காரியங்களுக்காக வெளியே செவ்வ தானாலும், புறப்பட்டுச் செல்கிற நேரம், செல்லும் இடம், மறுபடியும் திரும்பும் நேரம் உட்பட எழுதி வைத்துவிட்டுப் போக வேண்டிய அவுட் ரிஜிஸ்தர் நோட்டுப் புத்தகம் அப்போது வார்டனின் மேஜை மேல் விரித்து வைக்கப் பட்டிருந்தது. பல்கலைக் கழக விதிமுறைகள் கண்டிப்பாக இருந்தாலும் பெரும்பாலான சமயங்களில் இந்த அவுட் ரிஜிஸ்தரை யாருமே பொருட்படுத்துவதில்லை. வார்டனும் இதை அதிகம் வற்புறுத்துவதில்லை.

இன்று வார்டன் அதை விரித்து வைத்துக் கொண்டு அவளிடம், “நீங்கள் நூறு பேருக்கு மேல் வெளியே போயிருக்கிறீர்கள்! நீங்கள் போன நேரம், போகிற இடம், திரும்பின நேரம் எதைப் பற்றியும் இந்த ரிஸிஸ்தரில் எழுதவே இல்லை. எப்படி யாரைக் கேட்டுக் கொண்டு காம்பஸ்-க்கு வெளியிலே போய் அவங்க மந்திரிக்குக் கறுப்புக் கொடி காட்டினாங்க? விமன்ஸ் ஹாஸ்டல் அவுட் ரிஜிஸ்டரோட உடனே என்னை வந்து பாருங்கன்னு வி.சி. கூப்பிடறாரு. இப்ப நான் என்ன செய்யட்டும்?” என்றாள்.

தன்னுடைய மெளனமும் பணிவும் வார்டனின் கோபத்தைத் தணிக்கும் என்று கண்ணுக்கினியாள் எதிர்பார்த்தது வீண்போகவில்லை. தன்னையும் மாணவி களையும் காப்பாற்றிக் கொள்ள வார்டனே அப்போது சாதுரியமாக ஒரு காரியம் செய்தாள். மாணவிகள் ஐந்து பேர் அடங்கிய குழுவாகவோ அதற்கும் அதிக எண்ணிக்கை அடங்கிய குழுவாகவோ ஷாப்பிங் திரைப்படம், சொற் பொழிவு ஆகியவற்றுக்காக விடுதியிலிருந்து வெளியே சென்று திரும்பலாம் என்று மற்றொரு விடுதி விதியின்படி