பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 - சத்திய வெள்ளம்

அவர்கள் ஷாப்பிங்குக்காக வெளியே சென்றதாக ரிஜிஸ் தரில் பதிவு செய்து கொண்டாள் வார்டன். வெளியே சென்றவர்களில் யார் யார் மந்திரிக்குக் கறுப்புக் கொடி காட்டினார்கள் என்பது பற்றித் தனக்குத் தெரியாது என்றும், தனக்குத் தெரிந்த விவரங்களின்படி பல்கலைக் கழக மாணவிகள் அல்லாத வேறு சில பெண்கள் கறுப்புக் கொடி பிடித்ததாகவும், அப்போது சில மாணவிகளும் அருகே நின்று வேடிக்கை பார்த்ததைத் தவிர வேறு குற்றம் எதுவும் செய்யவில்லை என்றும் பொய்யாக ஒரு விளக்கத் தையும் தயாரித்து எழுதி, “உன்னையும் உன் தோழிகளை யும் காப்பாற்றுவதற்காக நான் இப்படி எல்லாம் புளுகித் தொலைக்க வேண்டியிருக்கிறது. இந்தத் தடவை சரி. இனிமேல் இப்படி அடிக்கடி ஏதாவது நடந்தால் அப்புறம் நான் எதுவுமே உதவி செய்ய முடியாது” என்று சொல்லிய படியே அவளிடம் ரிஸ்தரையும் துணைவேந்தருக்கு எழுதப்பட்ட தன்னுடைய விளக்கப் பதிலையும் காண்பித் தாள் வார்டன் அம்மாள். அந்த அம்மாளின் கண்டிப்பும் அதை ஒட்டிய வாஞ்சையும் கண்ணுக்கினியாளின் மனத் தில் நன்றி சுரக்கச் செய்தன. அவள் வார்டனிடம் மனம் நெகிழ்ந்த வார்த்தைகளால் தன் நன்றியைத் தெரிவித்தாள். ‘அவுட்ரிஜிஸ்தர் விஷயத்தில் வார்டன் அப்படிப் புளுகி உதவி செய்திராவிட்டால் துணைவேந்தர் தன்னையும் வேறு சில மாணவிகளையும் அப்போதிருந்த ஆத்திரத்தில் பல்கலைக் கழகத்திலிருந்தே சஸ்பெண்டு செய்கிற அளவு போயிருப்பார் என்பதைக் கண்ணுக்கினியாளால் உணர முடிந்தது. கோபத்திலும் கண்டிப்பிலும்கூட இப்படி அழகான கோபங்களையும் அன்பான கண்டிப்புக்களையும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. எதையும் வெறுப் பதனால் சிலர் கோபப்படுகிறார்கள். எல்லாவற்றையும் நேசிப்பதனாலும் சிலர் கோபப்படுகிறார்கள். வளைவான வாத்தியத்தில் நேரான இசையைக் கிளரச் செய்கிறவர் களைப் போன்று பக்குவமானவர்களாக இருப்பதையும் அவள் பலமுறை பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கிறாள்.