பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 சத்திய வெள்ளம்

மணியளவிலேயே முடிந்தது. இந்த விழாவுக்காக அன்று பல்கலைக்கழகத்தில் விடுமுறையைக் கோரி வாங்கி யிருந்தார்கள் பல்கலைக்கழக மாணவர்கள்.

அன்று பிற்பகலில் அண்ணாச்சி தம் கடைவாசலில் நேரு விழாவுக்காக ஒரு பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்திருந்தார். அதற்கும் பாண்டியன் பேசப் போக வேண்டியிருந்தது. அண்ணாச்சி ஏற்பாடு செய்திருந்த அந்தக் கூட்டத்திலோ, கூட்டம் நடப்பதற்கு முன்போ மல்லை இராவணசாமியின் ஆட்கள் ஏதாவது கலகம் செய்வார்களோ என்ற ஒரு சந்தேகம் இருந்தது. அர்த்தால் ஊர்வலத்தன்று கோட்டம் குருசாமியின் கடை தாக்கப் பட்டது. இராவணசாமியின் வீட்டுமுன் மாணவர்கள் மறியல் செய்தது, அதற்கும் முன்னால் அவருக்குச் சொந்த மான லாரிகளை மடக்கிப் பல்கலைக் கழக எல்லைக்குள் நிறுத்திக் கொண்டது, இதனால் எல்லாம் ஆத்திரம் அடைந்திருந்த அந்தக் கட்சியினர் பாண்டியனையும் அவனோடு முக்கியமாயிருந்த மாணவப் பிரமுகர்களையும், அவர்களுக்குப் பாதுகாவலாயிருக்கும் அண்ணாச்சியையும் முரடர்களைக் கொண்டு தாக்கிவிடத் துடிதுடித்துக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. இராவணசாமி முதலியவர்களுக்குப் பாண்டியன் மேலும் அண்ணாச்சி மேலும் இருந்த கோபம் முற்றி வெறியாக வளர்ந்திருந்தது. அடிதடிகளில் இறங்கக்கூட அவர்கள் தயாராக இருந்தார் கள். அண்ணாச்சியே இதுபற்றிப் பாண்டியனிடம் பலமுறை சொல்லி எச்சரித்திருந்தார். பாண்டியன் அவர் எச்சரித்த போதெல்லாம் அந்த எச்சரிக்கையைக் கேட்டுக் கொண்டானே ஒழிய அப்படி எதுவும் தனக்கு அபாயம் ஏற்பட்டுவிட முடியும் என்று நினைத்து அஞ்சவில்லை.

பல்கலைக் கழக நேரு விழாப் பட்டிமன்றம் முடிந்து மெஸ்ஸுக்குப் போய்ப் பகல் உணவை முடித்துக் கொண்டு அறைக்கு வந்து ஒரு மணி நேரம் ஒய்வெடுத்துக் கொண்ட பின் மூன்று மணிக்கு அண்ணாச்சிக் கடைக்குப் புறப்பட்டான் பாண்டியன். வேறு சில மாணவர்களும்