பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 353

உடன் வந்தனர். அவன் புறப்படும்போது கண்ணுக் கினியாளின் ஃபோன் வந்தது. பெண்கள் விடுதியில் வெளியேபோவது வருவதில் கட்டுப்பாடுகள் அதிகமாக இருப்பதால் தான் அப்போதே அண்ணாச்சிக் கடைக்கு வரமுடியாமலிருப்பதாகவும் மாலை ஐந்து மணி முதல் ஏழுமனி வரை வெளியே வருவதற்கு மட்டும் சிரமப்பட்டு அநுமதி பெற்றிருப்பதாகவும் கூறினாள் அவள்.

“நீ ஏன் வீணாகச் சிரமப்படனும்? நீ வரவேண் டாமே! நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றான் அவன். அவளுக்கு அவன் சொல்லியதைக் கேட்டுக் கோபமே வந்துவிட்டது.

“நான் உங்கள் பேச்சைக் கேட்க வருவது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லி விடுங்களேன். சிரமம் கிரமம் என்று இதெல்லாம் என்ன வார்த்தையென்று பேசுகிறீர்கள்?”

“அதுதான் எனக்குப் பேசத் தெரியவில்லை என்பதைக் காலையில் நேரு விழாப் பட்டிமன்றத்தில் வெற்றி பெற்றதன் மூலமே நீ நிரூபித்துவிட்டாயே?”

“பார்த்தீர்களா? பார்த்தீர்களா? நீங்கள் இப்படி யெல்லாம் சொல்லிக் காட்டுவீர்கள் என்று தெரிந்திருந்தால் நான் அந்தப் பட்டிமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உங்களை எதிர்த்துப் பேசியே இருக்க மாட்டேன். நம்மில் யார் ஜெயித்தால் என்ன? நான் ஜெயித்தாலும் நீங்கள் தான் ஜெயிக்கிறீர்கள். நீங்கள் ஜெயித்தாலும் அதனால் நான்தான் ஜெயிக்கிறேன். நமக்குள் வெற்றி தோல்வி ஏது? நீங்கள் இப்படிப் பிரித்துப் பேசலாமா?” என்று அவள் அவனைப் பதிலுக்குக் கேட்கவே அவன் மனம் இளகினான். அவளைச் சமாதானப்படுத்தவும் முயன்றான். மாலையில் நடைபெறுகிற நேரு விழாப் பொதுக் கூட்டத்துக்குக் கண்டிப்பாக அவளை வரச் சொன்னான். அவளும் சிறிது நேரம் சொற்பொழிவாற்றிவிட்டு அப்புறம் திரும்ப வேண்டிய நேரத்துக்குள் விடுதிக்குத் திரும்பி

ச.வெ-23