பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 சத்திய வெள்ளம்

விடுதிக்குத் திரும்ப இருந்தபோது, கண்ணுக்கினியாளையும் பாண்டியனையும் மட்டும் கடையின் முன் பகுதிக்குத் தனியே கூப்பிட்டுக் கொண்டு போனார் அண்ணாச்சி. கடை முகப்புக்கு அழைத்துச் சென்று, “சாயங்காலம் இங்ஙனே கடைக்கு எதிரே என்ன நடந்திச்சு தெரியு மில்லே...? தம்பியை நீதான் எச்சரிக்கனும், தங்கச்சீ” என்று தொடங்கி இராவணசாமியின் கட்சி ஆட்கள் மாணவர் களைத் துரத்தித் தாக்க வந்ததை அவளிடம் விவரித்தார். அதைக் கேட்டு அவள் பதறினாள். நீங்கள் இப்படிச் செய்யலாமா? என்று கேட்பது போல் பாண்டியனை அன்பு கலந்த கோபத்தோடு கண்டிக்கும் பாவனையில் ஏறிட்டுப் பார்த்தாள் அவள்.

“தங்கச்சியை நினைச்சாவது இனிமே நீ அபாயங் களைப் பற்றிக் கவலைப்பட்டு எச்சரிக்கையா இருக்கனும் தம்பி! தங்கச்சி உன்மேலே உசிரையே வச்சிருக்கறப்ப அது பதறிப் போற மாதிரி நீ நடந்துக்கிடக் கூடாது. நம்மைப் பற்றிக் கவலைப்படறவங்க கவலைப்படுவது அதிகமா கிறதுக்கு நாமே காரணமாக இருந்திட்டா எப்படி? நீ பாதுகாப்பு இல்லாமே தனியா எங்கேயும் சுற்றக்கூடாது. கொலை வெறியோட எதிரிங்க அலையறாங்க. உன்னைச் சுற்றிலும் உனக்கு எத்தினி பகைமை, விரோதம், குரோதம் எல்லாம் இருக்குன்னு உனக்கே தெரியாது தம்பீ! வேணும்னேதான் தங்கச்சியைப் பக்கத்திலே வைச்சுக் கிட்டு இதையெல்லாம் உங்கிட்டச் சொல்றேன். உன் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படற அதிகப் பொறுப்பு உன்னைவிட அதுங்கிட்டத்தானே இருக்க முடியும்?” என்று அவளையும் அருகே வைத்துக் கொண்டே பாண்டியனை எச்சரித்தார் அண்ணாச்சி.

இருபத்தொன்பதாவது அத்தியாயம்

நேரு விழாக் கூட்டத்தன்று மாலை தன்னையும் அருகில் வைத்துக் கொண்டு அண்ணாச்சி பாண்டியனைக்