பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 சத்திய வெள்ளம்

நான் ஒன்றும் காயாத கானகத்தே பாடவில்லையே?” “நீங்கள் அதையும் பாடினால் நான் இங்கே நிற்க முடியாது.”

சொல்லிவிட்டு அவள் சிரித்தாள். அவன் மானைக் கீழே புல்தரையில் விட்டுவிட்டு அவளிடம் வலது உள்ளங் கையைக் குழிவாக நீட்டித் தலைக்கு வைத்துக் கொள்ளக் கொஞ்சம் எண்ணெய் வாங்கிக் கொண்டான்.

அருவி நீராடலுக்குப்பின் உடம்பு சலவைக்குப் போட்டு எடுத்ததுபோல் இலேசாகிப் பசி வயிற்றைக் கிள்ளியது. காலையில் கொண்டு வந்திருந்த சிற்றுண்டிப் பொட்டலங்கள் எல்லாம் தீர்ந்திருந்தன. அணைக்கட்டு ஊழியர் குடியிருப்பையும் இன்ஸ்பெக்ஷன் பங்களாவை யும் ஒட்டியிருந்த காண்டீனில் பகல் உணவுக்காக எற்பாடு செய்யலாமா அல்லது மல்லிகைப் பந்தலுக்கே திரும்பி விடலாமா என்று பாண்டியன் முதலிய மாணவர்கள் சிந்தித்துத் தயங்கிக் கொண்டிருந்தபோது அண்ணாச்சி எதிர்பாராத விதமாக அங்கே ஒரு ஜீப்பில் வந்து இறங்கினார்.

“சைக்கிள்களை எல்லாம் நீங்க இங்கே எடுத்துக் கிட்டு வந்துட்டதாலே கடையிலேயும் வேலை எதுவும் இல்லே. நீங்க கொண்டாந்த டிபன் பொட்டலம் போதாதுன்னு தோணிச்சு. மறபடியும் சங்கர் பவன் அய்யருகிட்டச் சொல்லிப் புளியோதரை, தேங்காய்ச்சாதம் மசால் வடை எல்லாம் போடச் சொல்லிச் சுடச்சுட வாங்கியாந்திருக்கேன். நியூஸ் பேப்பர் பார்ஸ்லுக வந்து வாடிக்கைக் காரங்களுக்குப் பேப்பர் கொண்டு போய்ப் போட்டானதும், நேரே சங்கர் பவனுக்கு வந்து இதெல்லாம் ஏற்பாடு பண்ணி ஒரு தெரிஞ்ச பார்ட்டி கிட்டே ஜீப்புக்கும் வழி செஞ்சப்புறம் பொறப்பிட்டு வந்தேன்” என்றார் அண்ணாச்சி.

“நீங்கள் ஏன் இவ்வளவு சிரமப்படனும் அண்ணாச்சி?” என்று பாண்டியன் அவரைக் கடிந்து கொள்ளத்