பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 சத்திய வெள்ளம்

அதை எப்படி அவருக்குச் சொல்லி விளக்குவது என்று பாண்டியனுக்குப் புரியவில்லை.

“சொந்தப் பகை எதுவும் இதில் இல்லை அண்ணாச்சி! வெறும் சித்தாந்தப்பகைதான். தீமைகளை எதிர்த்துவிட்டுத் தீயவர்களை நம் வழிக்கு மாற்ற நினைக்கிறோம் நாம். அவர்களோ தீமைகளையும் தீயவர்களையும் சேர்த்தே அழித்துவிட நினைக்கிறார்கள்.” என்று மெல்ல அந்த மாறுதலைப் பாண்டியன் அண்ணாச்சிக்கு விளக்கினான். உடனே மணவாளனுக்குத் தந்தி கொடுத்து அவரை வரவழைக்கச் சொன்னார் அண்ணாச்சி. பாண்டியன் தந்தி கொடுத்தான். மறுநாள் பகலில் மணவாளன் மதுரையிலிருந்து வந்து சேர்ந்தார். மணவாளன் தலைமையில் தேசியத் தொழிலாளர் யூனியன் ஹாலில் பல்கலைக்கழக மாணவர் கூட்டம் நடந்தது. அப்போது தெரிந்த ஒரு கணக்கின்படி ஐந்து சதவிகிதம் மாணவர்கள் கதிரேசன் தலைமையில் தீவிரவாதிகளாக அணிவகுத் திருப்பதையும், பதினைந்து சதவிகிதம் மாணவர்கள் மல்லை இராவணசாமி கட்சியின் சார்பாக இருப்பதை யும் எந்தச் சார்பும் இல்லாத உதிரிகளாகப் பத்து சதவிகித மாணவர்கள் இருப்பதையும், மீதியுள்ள எழுபது சதவிகிதம் தங்கள் பக்கம் இருப்பதையும் பாண்டியன் அறிந்தான்.

மணவாளன் பாண்டியனுக்கு ஆறுதல் கூறினார்! “கவலைப்படாதே! பிச்சைமுத்துவும் நீண்டநாள் தேசிய வாதியாக இருந்துதான் சலிப்புற்றுத் தீவிரவாதியாகி விட்டார். அவரை வெறுக்க வேண்டிய அவசியமில்லை. நல்ல படிப்பாளி. சமூகக் கொடுமைகள் அவரைக் கோபக் காரராக்கிவிட்டன. கதிரேசன் அவரால் கவரப்பட்டு விடுவான் என்பதை ‘அவன் அவரை நிலக்கோட்டையில் சந்தித்தான் என்று முதல் முதலாக அறிந்தபோது நான் எதிர்பார்த்தேன்.”

“அடைகிற மார்க்கம் முக்கியமில்லை. எய்துகிற இலட்சியமே முக்கியம் என்கிறார் அவர்.” -