பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சத்திய வெள்ளம்

வந்ததுமே இளசாகப் பொறுக்கி வார்டனுக்கும் வி.சி.க்கும் அனுப்பி விட்டுத்தானே எல்லாம் நடக்கிறது?” என்றான். “ஆமாம் வி.சி.க்கு இளசாகப் பொறுக்கி அனுப் பினால்தான் பிடிக்கும்?” - என்று வேறு ஒரு மாணவன் குறும்பாக ஆரம்பிக்கவே சிரிப்பலைகள் ஒயச் சில விநாடிகள் ஆயின.

மெஸ் சூபர்வைஸ்ர் வாயைத் திறக்கவில்லை. அவர் கள் பேசிய எதையும் காதில் போட்டுக்கொண்டதாகவே காண்பித்துக்கொள்ளவும் இல்லை. எப்படியாவது அவர்கள் சாப்பிட்டு முடித்து வெளியேறினால் போதும் என்று இருந்தது அவருக்கு. பல்கலைக் கழக நிர்வாகம் அவர்களுக்கு முன் அவரை நிமிர்ந்து பார்க்கும் படி வைத்திருக்கவில்லை. அவர்கள் பேசிய ஊழல்கள் அங்கே நடைபெறாமல் இருந்தாலல்லவா அவர் நிமிர்ந்து நின்று அவர்களுக்குப் பதில் கூற முடியும் ? அப்படி எல்லாம் நடப்பது அவருக்கே தெரியும். அப்புறம் பதில் பேச என்ன இருக்கிறது? சமூக, தார்மீக, நிர்வாகத் துறைகளில் இளைஞர்களிடம் ஆண்டி-எஸ்டாபிளிஷ்மெண்ட்” மனப்பான்மை வளருவதற்குக் காரணமே ‘எஸ்டாபிளிஸ், மெண்ட்களில் மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் கூடத் தெரியும் ஊழல்கள்தான்.

மரக்கட்டையில் நெருப்புப் பற்றுவதை விடப் பஞ்சில் விரைந்து நெருப்புப் பற்றிவிடும். இளைய சமுதாயத் தினரும், மாணவர்களும் பஞ்சு போலிருக்கிறார்கள். வயதானவர்கள் எதிர்க்கத் தயங்கும் அநீதிகளை அவர்கள் உடனே எதிர்க்கிறார்கள். நியாய நெருப்பு உடனே அவர் களைப் பற்றிக் கொதிக்கச் செய்கிறது. வயதானவர்கள் நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என ஒத்திப் போடு வதை இளைஞர்கள் இன்றே செய்துவிடத் துடிக்கிறார்கள். மூத்தவர்கள் சகித்துக் கொள்ளப் பழகிவிட்ட ஊழல்களை இளைஞர்கள் முழு வேகத்தோடு எதிர்க்கும் காலம் இது என்பது மெஸ் சூபர்வைச்ருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. பல்கலைக் கழக எல்லையிலே அங்கங்கே நடக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/38&oldid=609726" இலிருந்து மீள்விக்கப்பட்டது