பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 379

சொற்களோடும் பாண்டியனின் அறைக்குள் நுழைந்தார் அண்ணாச்சி. தன் முன் பிரித்து நீட்டிய செய்தித்தாளில் அவர் சுட்டிக்காட்டிய பகுதியைப் படித்ததுமே பாண்டிய னுக்குப் பகீர் என்றது. அவன் அதிர்ச்சி அடைந்தான்; திகைத்தான்.

பத்திரிகையில், எஸ்டேட் அதிபர் கொலை செய்யப் பட்டார். தீவிரவாதிகளைப் போலீஸார் தேடுகின்றனர். இரத்த வெள்ளத்தில் தீவிரவாதிகளின் பிரசுரங்கள் சிதறப் பட்டிருந்தன - என்று நாலு பத்திக்குத் தலைப்பு இட்டுச் செய்தியைப் பிரசுரித்திருந்தார்கள். மல்லிகைப் பந்தலி லிருந்து பத்தாவது மைலில் இருந்த அந்த எஸ்டேட் அதிபரை அவருடைய எஸ்டேட் விருந்தினர் விடுதியில் வைத்துக் கொலை செய்த தீவிரவாதிகள் - புரட்சிப் பூக்கள் இரத்த வெள்ளத்தில்தான் பூக்க முடியும்’ - என்ற தங்கள் பிரசுரத்தைக் கொலையுண்டவரின் உடலைச் சுற்றிலும் தூவிவிட்டுத் தப்பி ஒடித் தலை மறைவாகிவிட்டார்கள் என்றும் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என்று கருதப் படும் கதிரேசன், வடிவேல், மலையாண்டி ஆகிய பல்கலைக் கழக மாணவர்களையும், பிச்சைமுத்து என்கிற டிரில் மாஸ்டரையும் போலீஸார் தேடி வருகிறார்கள் என்றும் செய்தி கூறியது.

‘இன்னிக்கி விடியக் காலம்பற ராயல் பேக்கரி மாடிக்குத் தேடி வந்து அந்த ஆர்டிஸ்ட் குமரப்பன் அறையைச் சோதனை போட்டுப் போலீஸ்காரங்க அவரைப் பிடிச்சுக் கிட்டுப் போயிட்டாங்க.”

“கதிரேசனும், பிச்சைமுத்துவும், மத்தவங்களும் யூஜி. (அண்டர் கிரெளண்ட்) ஆயிட்டாங்க போலே இருக்கு...!” “தப்பிக்கிறது கஷ்டம்! எப்பிடியும் பிடிச்சுடுவாங்க. போலீஸ்காரங்க மலையை வலை போட்டுத் தேடிக்கிட்டி ருக்காங்க..” -

“கொலை செய்யப்பட்ட எஸ்டேட் அதிபர் ஆளும் கட்சிக்கு ரொம்பவும் வேண்டியவர். பெரிய லட்சாதிபதி, மல்லை இராவணசாமிக்குச் சொந்தக்காரர்."