பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 381

அடுத்த தலைமுறையாகிய இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களை வேறு கடுமையான வழிகளே கவர்ந்து மாற்றுவதற்குக் காரணம் என்ன என்பதைப் பற்றி அவர் மனம் விரைந்து சிந்தித்தது. இளைஞர்களில் ஒரு சாரார் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பது போல் ஹிப்பிகளாக மாறுவதையும், மற்றொரு சாரார் இரத்த வெள்ளத்தை ஒடச் செய்துதான் சமூகத்தைத் திருத்த முடியும் என்கிற அளவு கடும்புரட்சிகாரர்களாக மாறுவதையும், இரண்டு எல்லைக்கும் நடுவே ஸைலண்ட் மெஜாரிட்டியாகப் பல இளைஞர்கள் நிதானமாக இருப்பதையும் அவர் கண்ணாரக் கண்டார். அவருக்கு ஆச்சரியமாகக்கூட இருந்தது. கதிரேசனின் குடும்பமும் ஒரு பரம்பரைப் பணக்காரக் குடும்பந்தான். ஊரிலேயே பெரிய ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடையும் வேறு இரண்டொரு ஏஜென்ஸி வியாபாரங்களும் கதிரேசனின் தந்தை அர்த்தநாரிக் கவுண்டருக்குச் சொந்தமாக இருந்தன. அர்த்தநாரிக் கவுண்டர் மல்லிகைப் பந்தல் நகரின் பரம்பரைப் பணக்காரராகவும், பெரிய மனிதராகவும் விளங்குகிறவர். அவருடைய மகனை அவருக்கே பிடிக்காத தீவிர சித்தாந்தங்கள் வசியப்படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது என்பதை நினைத்தாலே புதுமையாகவும், வியப்பாகவும் இருந்தது. வங்காளத்திலும், ஆந்திராவிலும், கேரளத்திலும் கூடப் பல பெரிய குடும்பத் துப் பிள்ளைகள்தான் சமூகத்தின் மேல் உள்ள கோபங் களால் இப்படி மாறியிருப்பதாகக் கேள்விப்பட்டிருந்ததை நினைவு கூர்ந்தார் அண்ணாச்சி. தமக்குத் தெரிந்து அந்தப் பல்கலைக்கழக மாணவர்களிடையே திறக்கப்படாமல் இருந்த ஒரு புதிய வாயில் இப்போது திறக்கப்படுவதை வருத்தத்தோடும், கழிவிரக்கத்தோடும் புரிந்து கொண்டு கண்கலங்கிய அண்ணாச்சி, கடை முகப்பில் யாரோ வந்து நிற்கவே கவனம் கலைந்து திரும்பினார்.

எதிரே இரண்டு சி.ஐ.டிக்கள் வந்து நின்று கொண்டி ருந்தார்கள். அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்.