பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 385

மூப்படைய இளமை பெறும். அதனால்தான் பாரதியார் கூட மூத்த பொய்கள்’ என்று பாடினார். நீ மனத்தினால் மூப்படைந்துவிட்டாய். நீ மனத்தினால் தளர்ந்துவிட்டாய்! அதனால்தான் காந்தியமே மூத்துவிட்டதாகவும் தளர்ந்து விட்டதாகவும் உனக்குப்படுகிறது கதிரேசன்!” என்று அப்போது பாண்டியன் கதிரேசனை மறுத்திருந்ததை நினைத்தபோது அண்ணாச்சிக்குத் திருப்தியாக இருந்தது. கடைப் பையனை அனுப்பி விட்டுப் பழைய நிகழ்ச்சி களை நினைத்தபடி பாண்டியனை எதிர்பார்த்துக் காத்தி ருந்தார் அண்ணாச்சி. நேரம் ஆகிக் கொண்டிருந்தது. பாண்டியன் இன்னும் வரவில்லை. -

女大 ★

பல்கலைக் கழக எல்லையில் அன்று காலை யிலிருந்தே கெடுபிடிகள் அதிகமாயிருந்தன. மைதானத்தில், வகுப்பறைகளில், நூல் நிலையத்தில், ஆசிரியர்களின் இலாகா அறைகளில், மெஸ்ஸில், காண்டீனில் எங்கும் சந்தித்துக் கொள்ளும் இருவரோ அல்லது பலரோ அந்த எஸ்டேட் அதிபரின் கொலையைப் பற்றியே பேசிக் கொண்டார்கள். அதில் சம்பந்தப்பட்டுத் தலைமறைவாகி விட்ட கதிரேசன் முதலிய மாணவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள். பெண்கள் விடுதியில் கண்ணுக்கினியாள் உட்படச் சில மாணவிகளின் அறைகள் கூடச் சோதனைக்கு ஆளாயின. மாணவர்கள் விடுதியில் பாண்டியன், மோகன், தாஸ் முதலிய பலருடைய அறைகள் போலீஸாரின் சோதனைக்கு உட்பட்டன. பொருளாதாரப் பேராசிரியர் பூதலிங்கத்தின் விடும் சோதனை செய்யப் பட்டது. துணை வேந்தர் இந்த நிகழ்ச்சியைச் சாக்காக வைத்துத் தமக்கு வேண்டாத ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லோரையும் கதிரேசனுக்கு வேண்டியவர்கள் என்று இரகசியமாகப் பட்டியல் போட்டுப் போலீஸாரிடம் கொடுத்திருந்தார். பல்கலைக் கழகக் காம்பஸ்-க்குள் வரவும் சோதனை யிடவும் விசாரிக்கவும் போலீஸுக்கு அநுமதியும் வழங்கி யிருந்தார். பேராசிரியர் பூதலிங்கத்தின் வீட்டில் சோதனை

ச.வெ-25