பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 சத்திய வெள்ளம்

நடந்தபோது அவர் வீட்டில் இல்லை. பல்கலைக் கழகத்துக்குப் போயிருந்தார். ‘ஆண்கள் யாரும் வீட்டில் இல்லை! அப்புறம் வாருங்கள் என்று பூதலிங்கத்தின் மனைவி எவ்வளவோ மன்றாடியும் கேட்காமல் போலீஸார் உள்ளே நுழைந்து துணிமணிகள் வைத்திருந்த பீரோ உட்படக் கலைத்தெறிந்து விட்டுப் போயிருந்தார்கள். பூஜை அறையைக்கூட விடவில்லை. பூட்ஸ் காலோடு உள்ளே நுழைந்து, பூஜை அறையையும் குடைந்து தள்ளித் தாறு மாறாக்கி இருந்தார்கள். மாணவர்களோடு கனிவாகப் பழகுகிறவர்கள் என்று பெயர் பெற்ற வேறு நாலைந்து பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் வீடுகளும் இதே கதிக்கு ஆளாயின. பகலுக்கு மேல் அன்று வகுப்புக்கள் நடக்கவில்லை. பிற்பகலில் துணைவேந்தர் செனட் ஹாலில் அவசர அவசரமாக எல்லாப் பிரிவு டீன்களும், பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் அடங்கிய ஸ்டாஃப் கவுன்சிலைக் கூட்டியிருந்தார். பகலில் வீட்டுக்குச் சென்றிருந்த பேராசிரியர் பூதலிங்கத்துக்கும் மற்ற ஆசிரியர் களுக்கும் தங்கள் தங்கள் வீடுகளில் புகுந்து போலீஸார் செய்த அட்டுழியம் தெரிய வந்தது. அடக்க முடியாத ஆத்திரத்தோடு ஸ்டாஃப் கவுன்ஸில் கூட்டத்துக்குப் போயிருந்தார்கள் அவர்கள்.

“நண்பர்களே! இந்தக் கூட்டத்தை மிகவும் அவசர மாக உங்கள் ஒத்துழைப்பை நாடிக் கூட்டியிருக்கிறேன். நம் பல்கலைக் கழகத்துக்கே ஒர் அபவாதத்தையும் கெட்ட பெயரையும் உண்டாக்கிவிட்டார்கள் சில தீவிர வெறி பிடித்த மாணவர்கள். இனியும் அப்படி நேரக்கூடாது. நீங்கள் பார்க்கும், பழகும் மாணவர்களில் இப்படிப்பட்ட தன்மைகள் யாரிடம் தெரிந்தாலும் நீங்கள் உடனே ரிஜிஸ்திராரிடமோ என்னிடமோ அந்த மாணவனைப் பற்றி இரகசியமாக ரிப்போர்ட் செய்ய வேண்டியது அவசியம். இன்றுகூட நமது மாணவர்களில் இந்தக் கொலையோடு சம்பந்தப்பட்ட மாணவர்களைப் பற்றிய விவரங்களை அறிவதற்காகப் போலீஸார் சில ஸ்டாஃப்