பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 37

நிர்வாக ஊழல்களைச் சம்பந்தப்பட்ட பல முதியவர்கள் சகிப்புத் தன்மையோடுவிட்டுவிடுவதைப் பார்த்தபோது, “சகிப்புத் தன்மை என்பதே ஒரு பெரிய கோழைத்தனமாகி இருப்பதை அவர் கண்டிருந்தார். அந்த சூபர்வைஸ்ரைப் பாண்டியனுக்கு நன்றாகத் தெரியும். உணவை முடித்துக் கொண்டு போகும்போது அவன் அவரை நோக்கிப் புன்னகை புரிந்தான். அவரும் அமைதியாகப்பதிலுக்கு முகம் மலர்ந்தார். இப்போது அவன் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் நண்பர்கள் அவனை அறைவரை கொண்டுவந்து விட்டுச் சென்றார்கள்,

“நமக்கு வேண்டாதவர்களில் விவேகம் உள்ளவர்கள் அதிகம் இல்லாவிட்டாலும் அடியாட்கள் நிறைய இருக் கிறார்கள். அதனால் நீ கவனமாக இருக்கவேண்டும்” என்று போகும்போது ஒரு நண்பன் பல்கலைக்கழகப் பூங்காவில் சந்தித்த சமயத்தில் அவள் எச்சரித்தது போலவே இப்போது அவனை எச்சரித்துவிட்டுப் போனான். அந்த எச்சரிக்கை அவனுள் அவளை நினைவூட்டிவிட்டது. - அன்றென்னவோ மாலையிலிருந்தே குளிர் அதிகமாக இருந்தது. அறைக் கதவைத் தாழிட்டுக் கொண்டு பாண்டியன் ஸ்வெட்டரை எடுப்பதற்காகப் பெட்டியைத் திறந்தான். இரண்டாண்டுகளுக்குமுன் அந்த ஸ்வெட்டரை வாங்கிய மாலை வேளையும், அறைக்குத் திரும்பியதும் அன்பரசன் கோஷ்டியிடம் சிக்கி அவஸ்தைப்பட்டதும் ஞாபகம் வந்தன. -

ஸ்வெட்டரைப் போட்டுக் கொண்டு ஜன்னல்களை அடைக்கப் போனபோது பின்புறம் தொலைவில் மலை உச்சியில் எங்கோ நெருப்பு எரிவது அழகாகத் தெரிந்தது. மலையின் கருநீல நெற்றியில் யாரோ தாறுமாறாகக் குங்கு மம் வைத்து விட்ட மாதிரி அந்தத் தீ எரிந்து கொண்டி ருந்தது. மலையின் நெற்றியைப் பற்றிய கற்பனையை ஒட்டி அந்தப் பெண் கண்ணுக்கினியாளின் அழகிய நெற்றி ஞாபகம் வந்தது, அவனுக்கு பேரவைச் செயலாளர் பதவியை வெற்றி கொள்ளு முன் ஒர் அழகிய பெண்ணின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/39&oldid=609742" இலிருந்து மீள்விக்கப்பட்டது