பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 சத்திய வெள்ளம்

யாட்டில் அவள் திறமைதான் வெளிப்பட்டது. அவன் நிறையக் கோட்டைவிட்டான். அதற்குள் அவளோடு விளையாட வேண்டிய தோழிகள் வந்துவிடவே விளை யாட்டை நிறுத்திக்கொண்டு அவளைத் தனியே அழைத் துச் சென்று நீதி விசாரணைச் சாட்சிகள் பற்றி நினை ஆட்டினான் அவன். அந்த விசாரணைத் தொடர்பாகப் பெண்கள் விடுதியிலிருந்து மூன்று சாட்சிகளும் உறுதியா யிருப்பதாக அவள் தெரிவித்தாள். “எதற்கும் அவர்களை இன்னொரு முறை பார்த்துப் பேசி வை: கதிரேசன் செய்த காரியத்தால் வந்த பரபரப்பைப் பயன்படுத்தி இங்கே எல்லா மாணவர்களையும் அரட்டி மிரட்டி ஒடுக்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்றான் பாண்டியன்.

“எங்களைப் பொறுத்தவரை அதற்கு அவசியமில்லை! மாணவர்களில் இருக்கும் சாட்சிகள் கைவிட்டாலும் விடலாமே ஒழிய மாணவிகள் நிச்சயமாகக் கைவிட மாட்டார்கள். நான் உங்களிடம் சத்தியம் செய்து கொடுக்கத் தயார்” என்றாள் அவள்.

“கதிரேசனை பெயிலில் வெளியே கொண்டுவர அவள் தந்தை எவ்வளவோ முயன்று பார்த்தும் முடியவில்லையாம். கேள்விப்பட்டேன்.”

“என்ன ஆகுமாம்?” “செஷன்ஸ் முடிந்த பின்னால்தான் தெரியும் ! அநேகமாகப் பிச்சைமுத்துவுக்குத் துக்குத் தண்டனையும், மாணவர்களாக இருப்பதால் கதிரேசன் முதலிய மற்ற மூவருக்கும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்படலாம் என்று பேசிக் கொள்கிறார்கள். இதில் அவர்கள் தப்பவே வழியில்லாதபடி மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

“ரொம்பப் பாவமாயிருக்கிறது.” “பாவம் ஏது? புண்ணியம் ஏது: நவநீத கவி சொல்லியிருப்பது போல, -

. “இருபதாம் நூற்றாண்டின்

பாவ புண்ணியங்களைப்