பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 397

வெளியே பொய்ப் பிரசாரம் செய்யத் தொடங்கி யிருந்தார்கள். இந்தப் பொய்ப் பிரசாரத்தை முறியடித்து. மீண்டும் மாண்வர் இயக்கத்தை உடனே வலுப்படுத்தவும் இப்போது உடனே அந்த மாநாட்டை அவசரமாக நடத்த நினைத்தார் மணவாளன். பாண்டியன் முதலிய மாணவர் களுக்கும் அவர் நினைப்பது, சரி என்றே பட்டது. நாடகப் பட்டப்பிரிவு மாணவ மாணவிகள், நகரத் தியேட்டர் ஒன்றில் நடத்திய இரண்டு நிதிவசூல் நாடகங்களின் மூலம் பதினையாயிரம் ரூபாய் மீந்ததும், நன்கொடைகள் மூலமும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து மாணவர்கள் வசூலித்து அனுப்பிய தொகைகள் மூலமும் இன்னொரு பதினையாயிரம் தேறியது. வேறு நிதி வசூல்களும் நடந்தன. -

தமிழகத்திலும் அகில இந்தியாவிலும் இருந்த சுமார் நானூறு சிறப்புப் பிரதிநிதிகளும், இருபத்தையாயிரம் மாணவர்களும் மகாநாட்டுக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்து ஏற்பாடுகள் நடைபெற்றன. பிரதிநிதிகளாக வரும் நானூறு பேருக்கு மட்டுமாவது தங்க இடம் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று பல்கலைக் கழக விடுதி அறை களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டுத் துணை வேந்தரைச் சந்திப்பதற்காக மணவாளனும், பாண்டியனும், கண்ணுக்கினியாளும் போயிருந்தார்கள். துணைவேந்தர் அவர்கள் கூறியதை எல்லாம் கேட்ட பின், சிரித்துக் கொண்டே “அரசியல் மகாநாடுகளுக்குப் பல்கலைக்கழக விடுதிகளைத் தரமுடியாது. மன்னியுங்கள்” என்று மறுத்து விட்டார். அவர் தெரிந்துகொண்டே வேஷம் போடுவதைக் கண்டு மணவாளன் கோபமுற்றார். - ,

“இது அரசியல் மகாநாடு இல்லை சார் அகி இந்திய தேசிய மாணவர் சம்மேளன மகாநாடுதான். மாணவர் நலனுக்கான ஆக்கபூர்வமான சிந்தனைகளையே இம் மகாநாடு நோக்கமாகக் கொண்டிருக்கிறது” என்று மணவாளன் கூறியதை அவர் ஏற்கவில்லை. கண்டிப்பாக மறுத்தார். கடைசியாக மணவாளன் கோபத்தோடு