பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சத்திய வெள்ளம்

இதயத்தைத் தான் வெற்றி கொண்டிருப்பது மெல்ல மெல்ல அவனுக்குப் புரிந்துகொண்டிருந்தது. தன்னைப் பற்றி நினைக்க, உருக, கவலைப்பட ஒரு பெண் இருக்கிறாள் என்ற எண்ணம் அவனைப் பூரிக்கச் செய்தது. தேர்தல் முடிகிறவரை தனியே போகாதீர்கள்’ என்று அவள் அக்கறையாக எச்சரித்ததை எண்ணியபோது, அவளோடு பல ஆண்டுகள் பழகிவிட்டது போல் ஒரு கணிவை அவன் அடைந்தான். ‘புன்னகையும் நாணமும் இங்கிதப் பேச்சுக்களுமாக எங்கெல்லாம் ஒர் அந்நியமான இளம் பெண் உன்னோடு நடந்து வருகிறாளோ அங்கெல் லாம் உனது சொர்க்கங்கள்...’ என்ற நினைவோடுதான் அன்று அவன் தூங்கப் போனான்.

மூன்றாம் அத்தியாயம்

சிதந்திர தினத்தை அடுத்து வந்த இரண்டு விடுமுறை நாட்களும் பிரசாரத்திலும், ஒவ்வொரு விடுதியாகப் போய் மாணவர்களைச் சந்திப்பதிலும் அண்ணாச்சி கடைக்கு எதிரே பொதுக்கூட்டம் போட்டுப் பேசுவதிலும் கழிந்து விட்டன. தலைவனுக்கு, பேரவைச் செயலாளனும் ஒத்த நோக்கு உடையவர்களாக இருந்தால்தான் பல்கலைக் கழகத்தில் பல காரியங்களைச் சாதிக்க முடியும் என்பதால் பாண்டியன் வோட்டுக் கேட்கும்போது மோகன் தாஸ்-க்கும் மோகன்தாஸ் வோட்டுக் கேட்கும்போது பாண்டியனுக்கும் சேர்த்தே கேட்டார்கள். பல்கலைக் கழக எல்லைக்குள் மாணவர் பேரவைத் தலைவர், செயலாளர் தேர்தல் சம்பந்தமான எந்தக் கூட்டமும் நடத்தக்கூடாது என்று ரிஜிஸ்திரார் சுற்றறிக்கை அனுப்பிவிட்டதனால் இரு தரப்பு மாணவர்களுமே வெளியேதான் கூட்டம் போட்டுப் பேசியாக வேண்டியிருந்தது. இவர்கள் இந்த வாயிலில் அண்ணாச்சி கடையருகே கூட்டம் போட்டார் கள் என்றால் அவர்கள் அந்த வாயிலில் ‘ஹில்டாப் டிரைகிளினர்ஸ் அருகே கூட்டம் போட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/40&oldid=609766" இலிருந்து மீள்விக்கப்பட்டது