பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 சத்திய வெள்ளம்

சொல்லிக் காட்டினார்: “அரசியல் மகாநாடுகளுக்குக்கூட நீங்கள் இந்தப் பல்கலைக்கழக மேஜை நாற்காலிகளையும், ஹாஸ்டல் பாத்திரங்களையுமே முன்வந்து வலுவில் கொடுத்து உதவியிருக்கிறீர்கள், ஸார்! போன வருடம் இங்கே மே மாத இறுதியில் மல்லை இராவணசாமியின் கட்சி நடத்திய வட்டார மகாநாட்டுக்கு வந்த பிரதிநிதிகள் பல்கலைக் கழக விடுதி அறைகளில் தங்கியதும், பொதுக் குழுக் கூட்டமே செனட் ஹால் பகுதியில் இரகசியமாக நடந்ததும் பொய்யில்லையே?”

“கல்வி அமைச்சரின் சிபாரிசால் அப்போது அப்படிச் செய்ய நேர்ந்தது.”

“ஒகோ! கல்வி அமைச்சரே சிபாரிசு செய்தால்தான் அப்படித் தவறுகளை நீங்கள் செய்வீர்கள் போலிருக்கிறது” என்று காரசாரமாக எதிர்த்துக் கேட்டு விட்டே வெளி யேறினார் மணவாளன். துணைவேந்தரின் ஆஷாட பூதித் தனம் வெறுப்பூட்டுவதாயிருந்தது.

அதன்பின் நகரத்திலுள்ள ஹோட்டல்களிலும், தேசியத் தொழிலாளர் யூனியன் கட்டிடங்களிலும், மற்ற இடங்களிலுமாகப் பிரதிநிதிகள் தங்க ஏற்பாடு செய்து நகரெல்லையில் ஒரு பெரிய பந்தலில் மகாநாடு நடத்து வதற்குத் திட்டமிட்டுக் காரியங்களைத் தொடங்கினார் !DడుడjáTáT,

வரவேற்பு ஏற்பாடுகள் கண்ணுக்கினியாள் முதலிய மாணவிகளிடமும், உணவு ஏற்பாடுகள் அண்ணாச்சி யிடமும், மகாநாட்டு விளம்பரப் பொறுப்பு பாண்டிய னிடமும் விடப்பட்டிருந்தன. இராப்பகலாக ஒடியாடி அலைந்து பணிபுரிந்தார்கள் அவர்கள். மல்லிகைப் பந்தலைப் போன்றதொரு மலைப்பாங்கான நகரத்தில் கடுங்குளிர் காலமான அந்தக் கிறிஸ்துமஸ் சமயத்தில் ஒரு பெரிய மகாநாட்டு ஏற்பாடுகளைக் கவனிப்பது மிகவும் சிரமமான காரியமாயிருந்தது. -

திடீரென்று மகாநாட்டுக்கு முதல் நாள் இரவு முனிசிபல் கமிஷனர் போலீஸாரோடு வந்து, “இந்த