பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 சத்திய வெள்ளம்

அன்பு மயமான நிர்வாகம்தான் ஒரு பல்கலைக்கழகக் கல்விக்குத் தேவை. தனிச் சட்டாம்பிள்ளைத் தனத்தினால் மட்டும் இருபதாம் நூற்றாண்டில் எதையும் கற்பிக்க முடியாது. இன்றைய சமூகத்தை நிர்ணயிக்கும் பொறுப்பில் பெரும் பங்கு ஏற்கும் இளைஞர்களுக்கு 18 வயதிலேயே ஒட்டுரிமை தரப்பட வேண்டும். படித்தவர்கள் வேலை யின்றித் தவிப்பது போன்ற நிலை நாட்டுக்கு நல்லதல்ல. வேலையை அடிப்படையாகக் கொண்ட கல்வி அவரவர் விருப்பத்துக்கேற்ப அமைய வேண்டும்” என்பது போலப் பல சீரிய கருத்துக்களைக்கூறி மகாநாட்டைத் தொடங்கி வைத்தார். அவர் பேச்சு மிகவும் உருக்கமாக இருந்தது.

அதையடுத்துப் பேசிய வட இந்தியப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஒருவர், “மாணவர்-பல்கலைக் கழக உறவு சீராக இருக்க வேண்டுமானால் பல்கலைக் கழக நிர்வாகக் குழுவில் சில மாணவர்களும் அங்கம் வகிப்பது அவசியம். மாணவர்களோடு நல்லுறவை வளர்க்காமல் வியாபாரத் தயாரிப்புப்போல் அவர்களைப் பரீட்சை களுக்குத் தயாரிப்பதுதான் இப்போதுள்ள கல்வியின் குறை. வெறும் பரீட்சைகளுக்குத் தயாரிப்பதைவிட அவர் களை எல்லாம் வாழ்க்கைப் பரீட்சைக்கே தயாரிக்கும் திறமை ஒரு பல்கலைக் கழகத்துக்கு வேண்டும்” என்றார். அவருடைய ஆங்கிலச் சொற்பொழிவின்போது மாணவர் கள் பலமுறை கரகோஷம் செய்து வரவேற்றனர்.

அழைப்பிதழ் கொடுத்திருந்தும், மல்லிகைப் பந்தல் துணைவேந்தர் அரசாங்கத்துக்குப் பயந்து அந்த மகா நாட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை. “வேர் இஸ் யுவர் வொண்டர்ஃபுல் வி.ஸி.?” என்று அந்த மாநாட்டுக்கு வந்திருந்த ஒரு வட இந்தியப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் பொறுமை இழந்து மணவாளனிடம் கேட்டார். மணவாளன் சிரித்துக் கொண்டே தாயுமானவனாரைப் பற்றி அவருக்கு விளக்கினார். பிற்பகல் மகாநாட்டில் மாணவர் பிரதிநிதிகள், பேசினார்கள். பாண்டியன் அந்த ஓராண்டில் மல்லிகைப்பந்தல் பல்கலைக் கழகத்தில் நடந்த