பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 403

நீதி விசாரணைகள், மாணவர் போராட்டங்கள் அதன் காரணங்கள் பற்றி விவரித்தான். மேரிதங்கம் தற்கொலை, பேராசிரியர் பூரீராமன், இலங்கை மாணவி பாலேஸ்வரி பிரச்சினைகள் விவரிக்கப்பட்டன. மாணவர்களின் அழைப்பை ஏற்றுப் பொருளாதாரப் பேராசிரியர் பூதலிங்கம், பூரீராமன், வேறுசில ஆசிரியர்கள் மட்டுமே அந்த மகாநாட்டுக்கு வந்திருந்தனர். மணவாளன் விரும் பியதற்கு இணங்கப் பிரதிநிதிகள் பேசியபின் பூதலிங்கம் ‘சூழ்நிலைக்கேற்ற கல்வி என்ற தலைப்பில் ஒர் அரிய ஆங்கிலச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அதன்பின் மகா நாட்டில் பல்கலைக் கழக மாணவர் நலன்களை அடிப் படையாகக் கொண்ட பல தீர்மானங்கள் முன்மொழியப் பட்டு வழி மொழிதலுடன் கரவொலியால் நிறைவேற்றப் பட்டன. பதினெட்டு வயது நிறைந்த அனைவருக்கும் ஒட்டுரிமை வேண்டும் என்ற தீர்மானம் முதலில் நிறை வேறியது. அடுத்துப் பல தீர்மானங்கள் நிறைவேறின. மகாநாடு மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றுவிட்டது.

இரவு ஒன்பது மணிக்குக் கண்ணுக்கினியாளும், மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழக நாடகப் பிரிவு மாணவர்களும் பிறரும் நடிக்கும் ஒரு நாடகம் அதே மகாநாட்டுப் பந்தலில் நடக்க இருந்தது. இரவு உணவு முடிந்ததும் நாடகம் தொடங்கிப் பதினோரு மணிக்குள் அதை முடிப்பதாக ஏற்பாடு. பிரதிநிதிகளும் பிற மாணவர் களும் சாப்பிட்டுவிட்டுக் கூட்டம் கூட்டமாகப் பந்தலுக்குள் வந்து அமர்ந்து கொண்டிருந்தனர். மணவாளனும், பாண்டி யனும் மற்றும் சில முக்கிய மாணவர்களும் ஊர் திரும்ப இருந்த தலைவர் ராமராஜ் அவர்களை வழியனுப்பப் போயி ருந்தனர். கிரீன் ரூம் என்ற தட்டி மறைப்பில் கண்ணுக் கினியாளும் மற்ற நடிகர்களும் நாடகத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். வெளியே குளிர் நடுங்கிக் கொண்டி ருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மகா நாட்டுக்கே திருஷ்டி கழித்ததுபோல ஒர் அசம்பாவிதம்

அங்கு நடந்தது.