பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பத்து மூன்றாவது அத்தியாயம்

வு மணி ஒன்பதேகால் ஆகியிருந்தது. மகாநாட்டுப் பந்தல் நாடகம் தொடங்கியிருந்தது. கண்ணுக்கினி யாளைத் தவிரப் பொன்னையா, மோகன்தாஸ், நடன சுந்தரம் முதலிய ஒவ்வொருவருக்கும் அந்த நாடகத்தில் பங்கிருந்ததால் அவர்கள் எல்லோருமே உள்ளே இருந் தார்கள். பந்தல் நிறைந்துவிட்டது. பக்கத்தில் மற்றொரு பந்தலில் கடைசிப் பந்தியாகச் சாப்பிட உட்கார்ந்திருந்த ஊழியர்களையும், மகாநாட்டுக்கு உதவி புரிந்த சாரணர் களையும் கவனித்துப் பரிமாறி உபசரித்துக் கொண்டி ருந்தார்கள் அண்ணாச்சி முதலியவர்கள். பந்தலுக்கு வெளியே ஏறக்குறைய ஆள் நடமாட்டமே இல்லை. குளிர் அதிகமாயிருந்ததனால் எல்லாக் கூட்டமும் மாணவர் மகாநாட்டுப் பந்தலுக்குள் இருந்தது. நாடகத்தில் முதல் காட்சி தொடங்கி முடிவதற்குள் மேடைக்குப் பின்புறம் இருந்து, “ஐயோ தீ தீ!. எந்தப் பாவியோ பந்தலுக்கு நெருப்பு வைத்துவிட்டானே!” என்ற கூக்குரலும் அதை யடுத்துக் கனன்று மேற்பாயும் தீ நாக்குகளும் எழுந்தன. பந்தலில் உடனே கூப்பாடும் குழப்பமும் பரவிக் கூட்டம் தறிகெட்டுக் கலைந்து ஒடத் தொடங்கியது. உடனே மகாநாட்டுப் பந்தலிலிருந்து பின்புறமாக விரைந்து மாணவர்கள் மேடையின் பக்கவாட்டில் தீப்பிடித்த இடத்திலிருந்து அவசரமாகத் திரும்பும் ஒரு ஜீப்பைப் பார்த்தனர். தி வைக்க வந்தவர்கள் அந்த ஜீப்பில்தான் வந்திருக்க வேண்டும் என்று புரிந்தது. சிரமப்பட்டு மோட்டார் சைக்கிளில் துரத்தி அந்த ஜீப் நம்பரைக்கூடக் குறித்துக் கொண்டு வந்துவிட்டான் ஒரு மாணவன். அது மல்லை இராவணசாமியின் ஜீப் என்பதும் புரிந்தது. தீயணைக்கும் அலுவலகத்துக்குத் தகவல் தெரிந்து அவர்கள் வருவதற்கு நேர்மாகிவிட்டது. தீ பரவுவதற்குள் கண்ணுக்கினியாள் முதலிய பெண்களையும் நாடகத்துக் காக இசைக்கருவிகளோடு வந்திருந்த பல்கலைக் கழக இசைக் கல்லூரி மாணவிகளையும் பத்திரமாக வெளியே