பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 405

கொண்டுவந்து சேர்த்தார்கள் மாணவர்கள். மகாநாட்டுக்கு உபயோகத்துக்காக டிரம்களில் நிரப்பியிருந்த தண்ணிரைக் கொண்டு அண்ணாச்சியும், பிறரும் தீயை அணைக்க முயன்றது பலிக்கவில்லை. பந்தலிலிருந்த மைக், ஒலி பெருக்கிகள், நாற்காலிகள் முதலியவற்றை முடிந்த மட்டும் வெளியேற்றி மின்சார இணைப்பைத் துண்டிப்பதற்கே படாத பாடுபட வேண்டியிருந்தது.

“பாவிக... நல்லாயிருக்க மாட்டாங்க. இப்பிடிப் போயிடுவாங்க..” என்று கோபம் பொறுக்க முடியாமல் கையைச் சொடுக்கினார் அண்ணாச்சி.

“எப்பிடியாவது நடக்க விடாமே மகாநாட்டை நிறுத்திப்பிடணும்னு ஒரு வாரமாகவே கருக்கட்டிக் கிட்டிருந்தாங்க. மகாநாடு பிரமாதமா நடந்திடிச்சு. வயிற் றெரிச்சல்காரங்க இருட்டினதும் இதைப் பண்ணிட் டாங்க...” என்று மனம் நொந்து போய்ச் சொன்னார் மணவாளன்.

கையில் வீணையோடு பேராசிரியர் பூதலிங்கத்தின் மகள் கோமதியும், மேக்-அப் கலைக்காத கோலத்தில் கண்ணுக்கினியாளும், பாண்டியனும், அண்ணாச்சியும் விலகி நின்று தீப்பற்றி எரியும் பந்தலைக் கண்கலங்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தீ அணைக்கும் படை வந்து நீண்ட நீண்ட குழாய்கள் மூலம் தண்ணிரைப் பீச்சியடித்துப் போராடியது. சிறிது நேரத்துக்கெல்லாம் போலீஸ் வேன் வந்தது. அந்த வேனில் வந்த எஸ்.ஐ.யிடம் தீ வைத்தவர்கள் தப்பிய ஜீப் எண்ணைக் கூறிப் பாண்டி யன் முதலியவர்கள் புகார் சொல்லியபோது, “நீங்கள் கூறுவது சாத்தியமே இல்லை! போலீஸ் கிளப் லானில் அதே ஜீப்பிலே வந்து மாலையிலிருந்து இராவணசாமி சர்க்கிள் இன்ஸ்பெக்டருடன் அங்கே ஏதோ முக்கிய விஷயமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். ஒரே ஜீப் எப்படி இரண்டு இடங்களில் இருக்க முடியும்?” என்று மறுத்தார் அவர். -

“போலீஸ் கிளப் லானில் இந்த ஜீப் நிற்பதோ நிற்காததோ எங்களுக்குத் தெரியாது சார்! ஆனால் இங்கே