பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 சத்திய வெள்ளம்

“எதற்காக இவ்வளவு அதிகாலையில் இங்கே வரச் சொன்னிர்கள்?” -

அவளுக்கு மறுமொழி கூறாமல் முதலில் பிள்ளை யாரைக் கும்பிட்டு வலம் வந்தான் அவன். அவளும் அவனோடு சேர்ந்து இணையாகப் பிள்ளையாரை வணங்கி வலம் வந்தாள். இருள் பிரியாத பனி விலகாத அந்த வைகறையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வேறு நடமாட்டமே இல்லை. வலம் வந்து முடித்ததும் தனது அதே கேள்வியை மீண்டும் அவள் அவனிடம் கேட்டாள். அவன் பதில் சொல்லாமல் அவளை ஏறிட்டுப் பார்த்தான்; சிரித்தான். அவன் பார்வை அவள் மேல் நிலைத்திருந்தது. அப்படியே வாரி அணைத்துக் கொள்ள வேண்டும் போன்ற சுகமான கோலத்தில் அப்போது அவள் இருந்தாள். இடைவெளியின் பொன் நிறம், தங்க வாய்க்காலாய் மின்னும் முதுகின் கீழ்ப் பகுதி, செழுமை யான தோள்கள், குறுகுறுப்பான பார்வை எல்லாமாக அவள் அவனருகே நின்றாள்.

“என்ன காரியமாக இந்தக் குளிரில் வரச் சொன் னிர்கள்?”

“காரியத்தை நான் முன்கூட்டியே சொல்லியிருந்தால் ஒருவேளை நீ இங்கே வந்திருக்கமாட்டாய்...!”

“நீங்கள் கூப்பிட்டீர்கள் என்பதே போதும்ானது. நீங்களே கூப்பிட்ட பிறகும் என்ன காரியம் என்று தெரிந்து கொண்டு வர வேண்டிய அளவு நான் உங்களுக்கு அந்நிய மில்லை. என்றாலும்.”

“காரியத்தைச் சொல்லட்டுமா?” - கண்களில் ஒளி மின்ன, முகமலர்ச்சியோடும் ஒரு புன்முறுவலோடும் அவன் சொல்வதை வரவேற்கக் காத்தி ருப்பது போல் கைகட்டி நின்றாள் அவள். கைகளைக் கட்டிக் கொண்டு சிரித்தபடி நிமிர்ந்து நின்ற அந்தக் கோலத்தில் அவள் உடல் அழகின் செழுமையும், வளப்பமும் கோடிட்டுக் காட்டினாற் போல் நன்கு தெரிந்து அவனை மயக்கின. - . -