பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 417

“இந்த அதிகாலையில் நீ மிகவும் அழகாயிருக்கிறாய். யூ ஆர் லுக்கிங் ஸோ நைஸ்!”

“போதும்; இதைச் சொல்வதற்குத்தான் இந்தப் பனியிலும் குளிரிலும் வரச் சொன்னிர்களா?”

“இல்லை, வேறு காரியமும் இருக்கிறது! இந்த அதிகாலையில் பிள்ளையார் சாட்சியாக நான் உன்னை கொள்ளையிடப் போகிறேன்.” -

“நீங்கள் சொல்வது பிழை! விரும்பாதவர்களிடமிருந்து ஒருவன் தான் விரும்பியதை அடைய முயல்வதுதான் கொள்ளை. நானே ஏற்கெனவே உங்களிடம்தான் இருக் கிறேன். என்னிடம் நீங்கள் எதையும் கொள்ளையிட முடியாது! ஞாபகம் இருக்கட்டும்.” w

அவள் பேசிக் கொண்டிருக்கும்போதே அவளது சந் - நிறக் கைகளைப் பற்றி அதிலிருந்த இரண்டு ஜதைப் பொன் வளையல்களையும், வலது கை மோதிர விரலிலிருந்த வைர மோதிரத்தையும் சிரித்தபடியே, மெல்லக் கழற்றினான் பாண்டியன். அவள் அதைத் தடுக்க வில்லை. சிரித்த முகத்தோடு அவனை அதைச் செய்ய அனுமதித்தாள்.

“ஒரு நிமிஷம். இதோ இன்னும் ஒன்று மீதம் இருக் கிறது.” என்று கூறியபடியே தன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியையும் கழற்றி அவன் கைகளில் வைத்தாள் அவள். “இந்தச் சங்கிலியும் வளைகளும் ஏன் இவ்வளவு பளபளப்பாகவும் பிரகாசமாகவும் இருக்கிறது தெரியுமா?”

“ஏனாம்?”

“தன்னைவிடப் பிரகாசமான ஒரு மேனியில் இவை இதுவரை பிணைந்திருந்ததுதான் காரணம்.”

அவள் முகம் சிவந்தது. புன்முறுவலுடன் அவனைத் தலையைச் சாய்த்து ஒலிலாகப் பார்த்தபடி, “வர்ணனை எல்லாம் போதும்! என்ன செய்யப் போகிறீர்கள் இதை?” என்று கேட்டாள் அவள். - . “உனக்கே இதற்குள் புரிந்திருக்க வேண்டும்! மகா நாட்டைப் பிரமாதமாக நடத்திவிட்டு பாக்கி நிற்கிறவர்

ச.வெ-27 -