பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி . 419

மோ அப்போது இந்த வளையல்களைத் திருப்பித் தருவதாக’ அன்று நானே உன்னிடம் வாக்களித்திருந்தேன்.”

“ஆமாம்! ஆமாம்! நீங்கள் வாக்குறுதி வீரர்தான். தெரியும்” என்று சிரித்துக்கொண்டே அவனுக்கு முன் கைகளை நீட்டினாள் அவள். அவனே அந்த வளையல் களை அவள் கைகளில் அணிவித்தான். அவள் அவனைக் கிண்டல் செய்தாள்: ..

“நன்றாக வளையல் அணிவிக்கிறீர்கள். ஒரு வளை கூட உடையவில்லையே? நீங்கள் வளையல் வியாபாரத் துக்கே போகலாம் போலிருக்கிறது.”

“இவ்வளவு அழகான கைகள் கிடைத்தால் அதையும் கூடச் செய்யலாம்; உன் கைகளுக்கு வளையல்கள் அழகைத் தரவில்லை. எந்த வளையல்களுக்கும் உன் கைகளே அழகைத் தரும்.”

“போதும்! போதும்! பெண்களைப் புகழ்கிறபோது அசடு வழியாத ஆண்களே இருக்க மாட்டார்கள் போல் இருக்கிறது?”

“அது எப்படி முடியும்? ஆண்களை அசடு வழியச் செய்வதே உன் போன்ற பெண்கள்தானே?”

உடன் இருவருடைய சிரிப்பொலிகளும் இணைந்து ஒலித்தன. பொங்கலுக்கு ஊர் புறப்படுவதைப் பற்றி அவள் கேட்டாள். போகும்போது சேர்ந்து போகலாம் என்று அவன் சொன்னான். பனியும் இருளும் விலகி மெல்ல மெல்ல விடிந்து கொண்டிருந்தது. அவள் விளை யாட்டாகக் கேட்டாள்: -

“புறப்படலாமா? அல்லது இன்னும் என்னிடம் நீங்கள் கொள்ளையிட ஏதாவது மீதம் இருக்கிறதா?”

“இருக்கிறது. ஆனால் பெரியவர்கள் நாளும் கிழமையும் பார்த்துக் கொடுக்க பின்புதான் சிலவற்றை ஒரு பெண்ணிடமிருந்து ஒர் ஆண் கொள்ளையிட முடிகிறது. என்ன? நான் சொல்வது உண்மைதானே?”

“ஆகா! ஒரு நோபல் பரிசே கொடுக்க வேண்டிய அளவுக்குப் பேருண்மைதான்! போய் வாருங்கள். ஒரு